பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிப்பாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிப்பாம்!

புதுடில்லி. அக்.19 கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில்தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப் படையில் விடுவிக்கப்பட் டனர் என உச்சநீதிமன் றத்தில் குஜராத் அரசு பதில் மனு தாக்கல் செய் துள்ளது. 

பில்கிஸ் பானு கூட் டுப் பாலியல் வன்முறை வழக்கில் ஆயுள் தண் டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்முறை வழக் கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அர சின் முடிவுக்கு எதிராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட் டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுக்களை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதில், விடுவிக் கப்பட்ட 11 பேரும் பதில் அளிக் கவும், கருணை அடிப்ப டையில் விடுவித்ததற் கான ஆவணங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கும் கடந்த மாதம் 9-ஆம் தேதி உத்தர விட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன் றத்தில்  மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், குஜராத் அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய் யப்பட்டது.  

அதில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன் கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக் கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப் படையில், ஒன்றிய அர சின் ஒப்புதலுடன் விடு விக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறப்பித்த உத் தரவின் அடிப்படை யில் கருணை அடிப் படையில் விடுவிப்பதற் கான கொள்கை வகுக்கப் பட்டது. ஆயுள் தண் டனை விதிக்கப்பட்ட 10 பேரை விடுவிப்பதற்கான குஜராத் அரசின் முன் மொழிவுக்கு விசாரணை அமைப்புகளும், செசன்ஸ் நீதிமன்றங் களும் எதிர்ப்பு தெரி விக்கவில்லை. 

இந்த விவகாரத்தில் தங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய சுபாஷினி அலி, மகுவா மொய்த்ரா ஆகி யோர் வழக்குரி மையை கொண்டிருக்க வில்லை. மனுதாரர்கள் யாரும் எங் கள் வழக்கில் தொடர்பை கொண்டி ருக்கவில்லை என அந்த பதில்மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment