ஒரு பெண் காவலரின் தாயுள்ளம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

ஒரு பெண் காவலரின் தாயுள்ளம்!

திருவனந்தபுரம்,அக்.31- கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாள்களே ஆன குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் சேவயூர் காவல் நிலை யத்தில் காவலராக இருப்பவர் ரம்யா. இவர் பணிசெய்யும் காவல் நிலையத்துக்கு கடந்த 22 ஆம் தேதி புழக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண் ஒரு புகாருடன் வந்தார். அதில் பிறந்து இரு வாரம் கூட முழுமையடையாத தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு என் கணவர் ஆதிலும், அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டனர். எனக்கும், என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இப்படிச் செய்துள்ளனர் எனவும் புகார் கொடுத்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆதிலும், அவரது தாயாரும் குழந்தையை பெங் களூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே சேவயூர் காவல்துறையினர் அவர்களை சுல்தான் பத்தேரி என்னும் பகுதி யில் சென்று கொண்டிருந்தபோது மடக்கிப் பிடித்தனர். அந்த குழுவில் காவலர் ரம்யாவும் சென்று இருந்தார்.

குழந்தையை மீட்டபோது அது பசியால் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. உடனே காவல்துறையினர் கல்பேட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் குழந்தையை முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச் சென் றனர். அங்கு குழந்தையை பரி சோதித்த மருத்துவர்கள் தாய்ப் பால் குடிக்காமல் குழந்தைக்கு இரத்த சர்க்கரை அளவு குறைந் திருப்பதாகத் தெரிவித்தனர்.

அப்போது காவலர்கள் குழு வில் இருந்த ரம்யா, குழந்தையின் பசியை போக்க மருத்துவர் அனுமதித்தால் தானே தாய்ப்பால் கொடுப்பதாகச் சொன்னார். மருத்துவர்களும் அனுமதிக்கவே குழந்தைக்கு தாய்பால் கொடுத்த தோடு, ஆசிகாவிடம் குழந்தையை ஒப்படைக்கும்வரை தாயுள்ளத் தோடு பாதுகாத்தும் இருக்கிறார் காவலர் ரம்யா.

குழந்தை கடத்தல் வழக்கில் குழந்தை யின் தந்தை ஆதிலை காவல்துறையினர் கைது செய் தனர். இதுகுறித்து காவலர் ரம்யா கூறுகையில், “எனக்கும் ஒரு வயதில் குழந்தை உள்ளது. பசியால் இந்தக் குழந்தை அழுதபோதும்கூட என் குழந்தைபோல் நினைத்துதான் பால் கொடுத்தேன். என் வாழ்வில் இன்று மிகவும் அர்த்தமுள்ள நாள்” என்றார்.


No comments:

Post a Comment