கிரகணம்: ஏழுமலையானை உலுக்குகிறதா? திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டதாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

கிரகணம்: ஏழுமலையானை உலுக்குகிறதா? திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டதாம்

திருப்பதி,அக்.25- கிரகணம் குறித்த அறிவியல் விளக்கங்கள் ஒரு புறம் இருந்தாலும் அறிவியலுக்கு புறம் பான நடவடிக்கைகளை மதம் சார்ந்த நிறுவனங்கள் பழக்க வழக்கங்களின் பெயரால் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. 

அதிலும் சர்வ சக்தி உள்ள கடவுள் என்று கூறிக்கொண்டு திருப்பதி ஏழு மலையானுக்கே கிரகணம் ஆகாது என்று கோவில் மூடப்படுகிறதாம். இதுகுறித்த தகவல் வருமாறு,

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்பட்டது. இன்று (25.10.2022) மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிர கணம் ஏற்படுகிறது. இதையொட்டி காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையொட்டி இன்று காலை 8.11 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. 

வி.அய்.பி பிரேக் தரிசனம், சிறீவாணி அறக்கட்டளை மற்றும் ரூ.300 கட்டண இணைய வழி தரி சனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங் களும் ரத்து செய்யப்பட்டன. 

சூரிய கிரகணத்தன்று சமையல் செய்யக்கூடாது எனும் மூடநம்பிக் கையால் திருப்பதியில் அன்னதான கூடமும் இன்று காலை முதல் மூடப் பட்டதாம். அதனால் பக்தர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்பட்டு வந்த அன்னதானமும் ரத்து செய்யப்பட் டுள்ளதாம்.

பரிகார பூஜைக்குப்பின்னர் திறப்பாம்

சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு சாமிக்கு பரிகார பூஜைகள் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோவில் திறக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பக்தர்கள் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சந்திரகிரகணத்திலும் மூடப்படுகிறதாம்

இதேபோல் நவம்பர் 8ஆம் தேதி மதியம் 2.39 முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அன்றும் காலை 8.40 முதல் இரவு 7.20 வரை கோவில் நடை மூடப்படுகிறதாம்.


No comments:

Post a Comment