வே. கோதண்டபாணியின் ‘தமிழ் இல்லம்’ திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

வே. கோதண்டபாணியின் ‘தமிழ் இல்லம்’ திறப்பு

சங்கராபுரம், அக். 22- 2.10.2022 ஞாயிறு அன்று கல்லக் குறிச்சி மாவட்டம், சங்க ராபுரம் வட்டம் அரிய லூர் கிளைக்கழகத் தலை வர் வே. கோதண்டபாணி கட்டிய இல்லத்திற்கு தனது மகள் பெயரான ‘தமிழ்’ என்று வைத்து அதன் திறப்பு விழாவை நடத்தினார்.

ஆவரணம் தமிழ் இல் லத்தை வே. கோதண்ட பாணியின் தாய் ஆவர ணம் பழனி- விஜயா ஆகி யோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் கல்லக் குறிச்சி மாவட்டத்தலை வர் ம.சுப்பராயன், பொதுக் குழு உறுப்பினர் த. பெரிய சாமி, மாவட்ட இளைஞ ரணித் தலைவர் அ. கரி காலன், விழுப்புரம் மண் டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் திரா விட புகழ், மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் செ. இராதா கிருட்டிணன், மூரார்பா ளையம் கிளைக்கழகத் தலைவர் இரா. செல்வ மணி, சங்கராபுரம்  கலை அன்பரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். வே. கோதண்டபானி தமது ‘தமிழ் இல்லத்திறப்பு விழா வின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000/- அளித்தார்.

No comments:

Post a Comment