நரபலிகளுக்கு என்ன பதில்? - ஹிந்து ராஜ்ய சூரர்களே? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

நரபலிகளுக்கு என்ன பதில்? - ஹிந்து ராஜ்ய சூரர்களே?

 மின்சாரம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காலடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். 

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மா (54). இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பத்மா மட்டும் எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவரது குடும்பத்தினர் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதற்கிடையே கடந்த 26-ந் தேதி அழைத்த போது, பத்மா செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இதனால் அவரது மகன் செல்வன் எர்ணாகுளத்துக்கு வந்து, தனது தாயை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால், அவரை காணவில்லை. இதுகுறித்து கடவந்தரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  2 பெண்கள் காணாமல் திடீரென காணாமல் போனது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். பத்மாவின் கைப்பேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில், பத்தினம்திட்டா திருவல்லா பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து காவலர்கள் அப்பகுதி யில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபருடன் பத்மா ஒரு காரில் சென்றது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷாபி என்ற ஷிகாப்பு (48) என்பது தெரியவந்தது.  அந்த நபரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவந்த் (55). இவரது மனைவி லைலா (52). இதற்கிடையே பகவந்துக்கு தொழில்விரயம் ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இருந்தார். அப்போது முகமது ஷாபியின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் பெரும்பாவூரில் தனக்குத் தெரிந்த சாமியார் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வ செழிப்பும், மேன்மையும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.  அந்தப்பெண் சாமியார் பணம் வேண்டி பூஜை செய்ய வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து முகமது ஷாபி, சாமியார் கூறியபடி நரபலிக்கு ஆட்களைக் கொண்டு வருவதாகக்  கூறினார். இதற்காக ரூ.10 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்ட அவர், நரபலி கொடுக்க பெண்ணை தேடி வந்தார். அப்போது ரோஸ்லினை சந்தித்து, சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி, தம்பதி வீட்டுக்கு கடத்தி சென்றார் அவரை அங்கு கட்டி வைத்து, தலையில் சுத்தியலால் அடித்தும், கழுத்தை கத்தியால் அறுத்தும் நரபலி கொடுத்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து வீட்டுக்கு பின்புறம் குழிதோண்டி உடலைத் துண்டு, துண்டாக வெட்டி புதைத்தனர். அதன் பின்னரும் தம்பதி வீட்டுக்கு அய்ஸ்வர்யம் கிடைக்க வில்லை. உடலை துண்டாக்கி புதைத் தனர் இதுகுறித்து தம்பதி முகமது ஷாபியிடம் கேட்டபோது அவர் சாமியாரிணியிடம் ஆலோசனை கேட்க சாமியார், மேலும் ஒரு நரபலி கொடுக்க வேண்டும் என்றார். 

 இதனை அடுத்து மேலும் ஒரு பெண் தேவை என்று கூறியதால் தம்பதி மேலும் ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளனர். இதையடுத்து முகமது ஷாபி பத்மாவை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதா கவும், பல லட்சம் தருகிறேன் என்றும் கூறி தம்பதி வீட்டுக்கு கடத்தி சென்றார். பின்னர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை, துண்டு, துண்டாக்கி புதைத்தது தெரியவந்தது. 3 பேர் கைது வாழ்க்கையில் திடீர் பணக்காரர்களாக ஆக ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்த பகவந்த், லைலா மற்றும் இடைத்தரகர் முகம்மது ஷாபி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 தொடர்ந்து திருவல்லாவில் புதைக்கப் பட்ட 2 பெண்களின் உடல்களை வெளியே எடுத்து, அடையாளம் காணும் பணியில் காவலர்கள்  ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நரபலிக்கு ஆலோசனை கூறிய சாமியார் குறித்து விசாரித்துவருகின்றனர்.

மதத்தின் பெயரால் நடைபெற்று இருக்கும் இந்தக் காட்டு விலங்காண்டித் தனத்தை எதைக் கொண்டு சாற்றுவது.

அர்த்தமுள்ள ஹிந்து மதம் பேசும் காவாளிகள், ஹிந்து ராஜ்யம் அமைப்போம் என்று அரட்டை அடிக்கும் அநாகரிகர்களில் இந்தச் செயலுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?

அக்கப்போர் அண்ணாமலைகளின் வாய்கள் தைக்கப்பட்டு இருப்பது ஏன்? ஏன்?

நரபலிகளுக்கும் பலன்கள் சொல்லும்  ஹிந்துமதம்

கேரளாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நரபலிகொடுக்கப்பட்டுளளனர். 

கடந்த 10 ஆண்டுகளில் ஜார்கண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, மற்றும் உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் 23 மேற்பட்ட கொலைகள் நரபலிக்காக நடந்துள்ளன என்று குற்றவியல் அறிக்கை கூறியுள்ளது. 

பெரும்பாலும் இந்தக் கொலைகளை சாமியார்கள் ஆலோசனை சொல்ல பிறகு நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாகி விடுவார்கள். ஆனால் ஆலோசனை கூறிய சாமியார் அவர் நியாயப்படுத்தும் மத நூல்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. 

ஹிந்து மதம் விலங்குகளை மட்டு மல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங் காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்.

புருஷமேதம்--மனிதர்களைக் கொன்று நடத்தப்பட்டதே புருஷ மேதம். இதில் பல வகைகள் உண்டு என சதபத பிராமணம் தெரிவிக்கிறது. இந்த யாகம் பற்றிய விவரங்கள் வாஜ சனேய சம்ஹிதை எனப்படும் சுக்ல யஜூர் வேதீய சம்ஹிதை, க்குஷ்ண யஜூர் வேத தைத்திரீய பிராமணம், ரிக் வேத அய்த்ரேய பிராமணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளன.

அசுவமேதம் போன்று சாகடிக்கப்பட விருக்கிற சர்வ லட்சணங்களும் பொருந் திய மனிதனைத் தேர்ந்தெடுப்பர். அவனுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பர்.

சைத்ர மாதத்தின் (சித் திரை) சுக்ல தசமியில் தொடங்கி 40 நாள்கள் இந்த யாகத்தை நடத்த வேண்டு மாம். இதற்கு அதிகாரிகளாகப் பார்ப்பனரும் சத்திரியர் களும் மட்டுமே இருக்க வேண்டுமாம். யாகம் முடிந்த பின் யாகத்தை நடத்தியவன் வானப் பிரஸ்தாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் (அதாவது சன்னியாசத்து முந்தைய நிலை)

சர்வ மேதம்விஸ்வகர்மா பொருள் களையெல்லாம் பலி கொடுத்து தன்னையே பலி யாக்கி நடத்திய யாகமாம். சொர்க்கப் பதவியை விரும்பி செய்யப்பட்ட யாகமாம். விசுவகர்மா ஆத்மவதை செய்து சர்வமேதம் நடத்தினான் என்று யாஸ்கனின் பாஷ்யத்தில் கூறப்பட்டுள்ளது.

கடவுளை சந்தோஷப் படுத்துவது என்கிற பெயரில் பசு, குதிரை, ஆடு, காளை முதலியவற்றைப் பலியிட்டு, அக்னிக்கு அளித்த பின்னர் புரோகிதர்கள் உணவுக்காக இறைச்சியைப் பயன்படுத்தி யுள்ளனர்.

விலங்குகளை ஏன் கொல்ல வேண்டும் எனக் கேட்டதற்குப் பார்ப்ப னர்கள் தந்த பதில்,  என்ன தெரியுமா? அந்த விலங்குகள் நேராகச் சொர்க்கத் திற்குப் போகின்றன என்பதுதான். முதல் பெரும் நாத்தி கனான சார்வாகன் கேட்டான் - அப்படியானால் யாகம் செய்பவன் தன் தந்தையை யாகத்தில் பலியிட்டு நேராகச் சொர்க்கம் செல்ல வழி ஏற்படுத்தலாமே எனக் கேட்டான். எவனும் பதில் சொல்ல வில்லை. 

ஹிந்து மதத்தின் எந்த நூல்களுமே கொல்லாமையை வலியுறுத்தவில்லை. மாறாக உயிர்க் கொலை செய்வதை அவை நியாயப்படுத்துகின்றன. உயிர் களைக் கொன்று யாகத் தீயில் பலியிடும் வழக்கம் பண்டைய ஆரியர்களின் மரபில் மிகச் சாதாரண மாகக் காணப் படுகின்றது. இவ்வளவு ஏன் ஹிந்து மதத்தின் புனிதச் சின்னமான பசுவைக் கொலை செய்வதையே ஹிந்து மதத்தின் புனித நூல்கள் நியாயப் படுத்துகின்றன.

ஹிந்து மதத்தின் மிக முக்கிய நூலான மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக் கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. அத்துடன் வேள்வி சிரார்த்தம் போன்றவற்றில் தரப் படும் இறைச்சியை உண்ண மறுக்கும் பிராமணன் இருபத்தியொரு முறை விலங்ககாப் பிறப்பான் என்றும் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).

ஹிந்து மதத்தின் முக்கிய முனிவர்களான தேவகுரு பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், பிரஜாபதி போன்ற வர்கள் பசு இறைச்சி உண்பது பாவமல்ல என்று கூறியிருக்கின்றார்கள். கந்த புராணம், தேவி புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம் போன்ற புராணங்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன. ஹிந்து மதத்தில் கடவுள்களகக் கருதப்படும் சிவன், விஷ்ணு, போன்றவர்கள் மது மாமிசம் போன்றவைகளை விரும்பி உண்டதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் இந்திரன், அக்னி, யட்சன், சோமா, அஸ்வினிகுமாரர்கள் போன்றவர்கள் மாட்டிறச்சியை விரும்பி உண்டாதாக பார்ப்பனரின் புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதிகாசக் கதாபாத்திரங் களான இராமன், சீதை, பாண்டவர்கள், திரௌபதி போன்றவர்கள் பசு இறைச்சியை விருந்தாகப் படைத்துத் தாங்களும் உண்டாதாக இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் நஞ்சு தடவப் படாத அம்புகளால் மான்களை வேட்டையாடி அவற்றை பிராமணர் களுக்குக் கொடுத்த பின் தாங்களும் உண்டதாகவும் ஜெயத்திரதனுக்கும் அவனது படைவீரர்களுக்கும் பாஞ்சாலி ஐம்பது மான்களைக் கொன்று விருந்து படைத்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது..

மகாபாரதத்தின் பதினெட்டு பர்வங் களில் ஒன்றான அனுசான பர்வத்தில் நாரதர் பிராமணர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் போன்றவற்றை வழங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

வால்மீகியின் இராமாயணத்தில் இளம் கன்றின் இறைச்சியை அரச குரு வசிஷ்டர் சுவைத்து உண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே இராமா யணத்தில் தசரதன் தனக்கு வாரிசு வேண்டி 'புத்திர காமேஷ்டி' யாகம் செய்த போது பல நூற்றுக் கணக்கான விலங்குகளை வெட்டி யாகத்தில் பலியிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

ஹிந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் பகவத்கீதை உயிர்களைக் கொன்று உண்பது பாவம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஹிந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சு னனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மனைவியானவள் தனது கணவனுக்குச் செய்யும் பணிவிடை களிலிருந்து தவறினால் அவளை வேட்டை நாய்களால் கடிக்கவிட்டுக் கொல்ல வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8 சூத்திரம் 371 ).

வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதம் கணவன் இறந்தால் மனைவி தீக்குள் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது (ரிக். 10, 18.7)

வேதங்கள், புராணங்கள், இதிகாசங் கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்த புகழ் பெற்ற இந்திய ஆய்வாளர்களான ராகுல் சங்கிருத்தியாயன், ராஜேந்திர லால் மித்ரா, லட்சுமண சாஸ்திரி, மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஹெச்.டி.சங்காலியா போன்றவர்கள் உயிர்களை யாகத்தில் பலியிடுவதும் அவற்றை இறைச்சியாக உண்பதும் வேதகால இந்தோஆரியர்கள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது என்பதையும், பிராமணர்களின் தர்ம சாஸ்திர நூல்கள் அவற்றை நியாயப் படுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாத சான்றுகளு டன் விளக்கியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது கொல்லா மைக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்த வித தெடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

உண்மையில் உயிர்க் கொலைகளைக் மிகக் கடுமையாக கண்டித்தவர்கள் பவுத்தத்தைத் தோற்றுவித்த புத்தரும் சமணத்தைத் தோற்றுவித்த மகாவீரரும்தான்.

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களுமே உழைத்து வாழ்வதற்காகக் கிடைத்த வேலையைச் செய்து வாழ்ந்து வந்தார்கள். இருவருமே லாட்டரி விற்றும், சித்தாள் வேலை பார்த்தும், பலசரக்குக் கடைகளில் தானியங்களைத் தூய்மைப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்தார்கள் என்று அவர்களது உறவினர்களே கூறியுள்ளனர்.

ஆனால், தினமலர் நாளேட்டில் இரண்டு பெண்களையும விபச்சாரிகள். ஆபாசப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மாட்டிக் கொண்டனர் என்று கீழ்த்தரமாக எழுதித் தன் அற்பப் பத்தியைக் காட்டிக் கொண்டுவிட்டது.

No comments:

Post a Comment