சென்னை, அக். 23- தமிழ்நாட்டிலுள்ள பெரிய வருவாய் கிராமங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள பரப் பளவு மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பெரிய வருவாய் கிராமங்களை இரண்டாகப் பிரித்து ஒரு புதிய நிர்வாக அலு வலரை நியமித்தல் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 3,500 முதல் 5,000 வரை மக்கள் தொகை, 1,500 முதல் 2,000 வரை பட்டாதாரர்கள், 2,000 முதல் 2,500 ஏக்கர் வரை நஞ்சை, 4,000 முதல் 5,000 ஏக்கர் வரை புன்செய் நிலங்கள், நில வருவாய் ரூ.20 ,000 முதல் ரூ.25,000 வரை என அளவுகோல் நிர்ணயித்து, தனி வருவாய் கிராமம் பிரிக் கப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் வருவாய் கிரா மங்களை இரண்டாகப் பிரித்தல் தொடர்பான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், தற்போது புதிய வருவாய் கிராமங்கள் பிரித்தல் மற்றும் உருவாக்குதல் தொடர்பாக தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியாக கோரிக் கைகள் பெறப்படுகின்றன.
இந்தக் கோரிக்கைகளை பரி சீலிக்கும்போது அந்தந்த மாவட் டங்களில் உள்ள மாவட்ட வரு வாய் அலுவலர்கள் தலைமையி லான அய்ந்து உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் வருவாய் கோட்டாட்சியர், நில அளவை உதவி இயக்குனர், பஞ்சாயத்து உதவி இயக்குநர் அல்லது நகராட்சி ஆணையர் அல்லது மாநகராட்சி ஆணையர், புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஆகி யோர் இடம்பெறுவர். இந்தக் குழு வின் முன், கிராமங்களை பிரிப்பது தொடர்பான கோரிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, புதிய கிராமங்கள் ஏற்படுத்தப்படும்.
இனி வரும் காலங்களில் கிரா மங்கள் மறுசீரமைப்பு தொடர் பான கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் குழு முறையாக ஆய்வு செய்து, அளவுகோல்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியருககு தங்கள் பரிந்துரையை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மீது மாவட்ட ஆட்சியர் உரிய பரிசீனை செய்து முன்மொழிவை துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் பரிந்துரை யின் பேரில் வருவாய் கிராமங்க ளைப் பிரிப்பது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகள் வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலம் அனுப்பப்படும். மாவட்ட அளவிலான குழுவை நியமித்து பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment