பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

பதிலடிப் பக்கம்

2000 ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வே!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

“மிலிந்த் பராண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு ரகசியமாக சதித்திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் ஒருதலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினர். அது அவர்களுக்கு 2014 மக்களவைத் தேர்தலில் உதவியது”

2006-ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலம் நான்டெட் டில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக் கல் செய்துள்ளார். அதில், பாஜகவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக, ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன் துணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிசத்தும் 2000 ஆம் ஆண்டுகளில் நான்டெட் மட்டுமல்  லாது நாடு முழுவதும் பல்வேறு இடங்க ளில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றிய தாக குறிப்பிட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்  படுத்தியுள்ளார். 49 வயதாகும், யஷ்வந்த் ஷிண்டே என்ற  அந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி, 2000-ஆம்  ஆண்டுகளில் நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2007 மற்றும் 2008-இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு உள்பட  நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்கு தல்கள், நான்டெட் குண்டுவெடிப்பின் அதே  சதியில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத் தால் திட்டமிடப்பட்டவை என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வெடிகுண்டு பயிற்சி

“இந்திரேஷ் குமார், ஹிமான்ஷு பான்சே, மிலிந்த் பராண்டே, ராகேஷ் தவாடே, ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி) ஆகியோர் இந்த குற்றங்களில் முக்கிய சதிகாரர்கள். மிலிந்த் பராண்டே மற்றும் ராகேஷ் தவாடே ஆகியோர் ஏற்பாடு செய்த பயிற்சி முகாமில் ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி)வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களில், மிலிந்த் பராண்டே தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தேசிய அமைப்பாளராக’ உள்ளார். ‘மிதுன் சக்ர வர்த்தி’ எனப்படும் ரவி தேவ் [ஆனந்த்] - இப்போது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உத்தர் கண்ட் பிரிவுக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

2006-ஆம் ஆண்டில், மகாராட்டிராவின் நான்டெட் மாவட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிசத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தின் தொண்டர் ஹிமான்ஷு பான்சே உட்பட இருவர் வெடிகுண்டு வெடித்ததில் இறந்து போயினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை யிலேயே யஷ்வந்த் ஷிண்டே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அந்த பிரமாணப் பத்திரத்தில், அவுரங்காபாத் மாவட் டத்தில் உள்ள ஒரு மசூதியைத் தகர்க்க வெடிகுண்டு தயார் செய்யும்போது, தவ றுதலாக குண்டுவெடித்து, ஹிமான்ஷூ பான்சே  இறந்ததாகவும், ஹிமான்ஷூ பான்சே  இந்துத்துவா சுற்றுச்சூழல் அமைப்பில் நீண்ட கால கூட்டாளியாகவும், சக பயணி யாகவும் இருந்ததால், இது தனக்கு தெரி யும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ராணுவத்திலும் பயிற்சி

மேலும், 1999 ஆம் ஆண்டில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)-இன் மூத்த  நிர்வாகியான இந்திரேஷ் குமாரின் அறி வுறுத்தலின் பேரில் ஹிமான்ஷுவையும் அவரது 7 நண்பர்களையும் தான் ஜம்மு விற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஹிமான்ஷூ பான்சே  உள்ளிட் டோர் இந்திய  ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுதப் பயிற்சி  பெற்றார்கள் என்று மற்றுமொரு அதிர்ச்சித் தகவலையும் ஷிண்டே வெளியிட்டுள்ளார். “ஜம்முவில் உள்ள தலாப் தில்லோ என்ற இடத்தில் பயிற்சி நடைபெற்றது” என்று இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும், 2003-இல் தானும், ஹிமான்ஷூ பான்சே-வும் புனேவில் உள்ள சிங்காட் அருகே நடைபெற்ற வெடிகுண்டு பயிற்சி  முகாமில் கலந்துகொண்டதாக கூறியிருக்கும் ஷிண்டே, அந்த முகாமில் தங்களுக்கு பயிற்சி அளித்த வர்கள் “முகாமின் முதன்மையான மற்றும் முக்கிய அமைப் பாளர்- தற்போதைய விஷ்வ ஹிந்து பரி ஷத்தின் தற் போதைய தேசிய அமைப்பாளர் மிலிந்த் பராண்டே ஆவார்” என்றும் நபர்களைப் பட்டியலிட்டுள்ளார். தற்போது 49 வயதாகும் ஷிண்டே தனது  முதல் ஒன்பது ஆண்டுகளை ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பில் இந்தி ரேஷ்குமாரின் (தற்போதைய ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர்) பயிற்சி யின் கீழ் கழித்ததாகவும் கூறியுள்ளார்.

ஜம்முவில் வெடிகுண்டு சோதனைகள்

முக்கிய பயிற்றுவிப்பாளரான ‘மிதுன் சக்ரவர்த்தி’ எனப்படும் ரவி தேவ் [ஆனந்த்] குறித்து கூறும் யஷ்வந்த் ஷிண்டே, “காலை 10 மணிக்கு முகாமுக்கு வரும் மிதுன் சக்ரவர்த்தி இரண்டு மணி நேரம் ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக வெடிகுண்டு பயிற்சி வழங்குவார். நாங்  கள் பயிற்சி எடுத்தபோது, எங்களுக்கு வெடி குண்டுகளை தயாரிப்பதற்காக  3-4 வகை யான வெடிப் பொடிகள், குழாய் துண்டுகள், கம்பிகள், பல்புகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, வெடி குண்டுகளை பரி சோதிப்பதற்காக, ஒரு தனிமையான காட்டுப் பகுதிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படு வோம். அங்கு குண்டுவெடிப்பு ஒத்  திகை நடக்கும். ஒரு சிறிய குழி தோண்டி,  அதில் வெடிகுண்டை டைமர் வைத்து,  அதை மண் மற்றும் பெரிய பாறைகளால் மூடி வெடிகுண்டை வெடிக்கச் செய்வோம்.  அப்போது எங்களின் சோதனை வெற்றிய டைந்தது. கற்பாறைகள் நீண்ட தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டன” என்று சம்பவங் களை நினைவு கூர்ந்துள்ளார்.

ஹிமான்ஷூ உயிரிழந்தது எப்படி?

“எனினும் குண்டுவெடிப்புகளில் எனக்கு  உடன் பாடில்லை. நான் மட்டுமன்றி, கூட்டா ளியான ஹிமான்ஷு பான்சேவை-யும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடவிடாமல் தடுக்க முயன்றேன். ஆனால் பயிற்சிக்குப் பிறகு ஹிமான்ஷு மகாராட்டிராவின் மராத்வாடா பகுதியில் மூன்று குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினார். அடுத்ததாக அவுரங்காபாத்தில் உள்ள முக்கிய மசூதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார், அந்த குண்டுவெடிப்புக்காக வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் அவர் 2006 இல்  நான்டெட்டில் உயிர் இழந்தார்” என்று யஷ் வந்த் ஷிண்டே விரிவாக கூறியுள்ளார்.

தனித்த நிகழ்வு அல்ல

ஷிண்டே-வின் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல் கள் மகாராட்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவைதான் என்றாலும், 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை தன்வசம் எடுத்துக் கொண்ட மத்திய புலனாய்வுப் பிரிவு, 2006 நான்டெட் குண்டுவெடிப்பு தனித்த சம்பவம் என்று கூறியிருந்தது. “நகரில் உள்ள ஒரு முகாமில் ஜெலட்டின்  குச்சிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக  தனது இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கு மாறு” மிலிந்த் பராண்டே கேட்டுக் கொண்ட தாக புனேவைச் சேர்ந்த சனத்குமார் ரக்வி தால் பேட் (ஓய்வுபெற்ற கடற்படை அதி காரி), பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்தார். இதையும் தாண்டித்தான் “நான்டெட் குண்டு வெடிப்பு தனித்த சம்பவம்” என்று சிபிஅய் முடிவுக்கு வந்தது. ஆனால், “நாடு முழுமைக்குமாக ஆர்எஸ்எஸ் வடிவமைத்திருந்த குண்டு வெடிப்பு சதித் திட்டத்தின் ஒருபகுதிதான் நான்டெட் குண்டுவெடிப்பு” என்று யஷ்  வந்த் ஷிண்டே தற்போது கூறியிருப்பது முடிச்சுகளை அவிழ்ப்பதாக அமைந் துள்ளது.

முடிச்சுகள் அவிழ்கின்றன

அதுமட்டுமல்ல, “நான்டெட் வெடி குண்டு தயாரிக்கும் முகாமில் இருந்த மற்ற நபர்களில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் தவா டேவும் இருந்தார்” என்று ஷிண்டே கூறுவது குண்டு வெடிப்பு வழக்குகள் தொடர்பான விசாரணையில் புதிய கதவுகளை திறந்து விட்டுள்ளது. 

மேலும், “2000-களில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் 2007 மற்றும் 2008 இல் மாலே கான் குண்டுவெடிப்பு உட்பட நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்கள், நான்டெட் குண்டுவெடிப்பின் அதே சதியில் இருந்து உருவானவை” என்று ஷிண்டே கூறி யிருக்கிறார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி  அலைகளை ஏற்படுத்துவதாக அமைந்துள் ளது. அவரது தகவல்கள் முன்னுக்குப் பின்  முரணின்றி சம்பவங்களோடு பொருந்திப் போகிறது. “வெடிகுண்டுகள் வைக்கும் திட்டத் தைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உள்பட பலரிடம் மிலிந்த்  பராண்டேவின் சூழ்ச்சிகளைப் பற்றி எச்ச ரிக்குமாறு பேசியதாகவும், ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை எனவும் பிரமாணப் பத்திரத்தில் யஷ்வந்த் ஷிண்டே  குறிப்பிட்டுள்ளார். உண்மையில், இந்தத் தலைவர்களின் சாக்குப் போக்கான காரணங்களைப் கேட்ட  பிறகு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.-யின்  மூத்த தலைவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கி றார்கள் என்ற உண்மை தெரியவந்ததாக கூறும் யஷ்வந்த் ஷிண்டே, 1999-இல் மும்பைக்குத் திரும்பியதாக வும், அங்கு  பஜ்ரங் தளத்தின் தலைவராக நியமிக்கப் பட்டதாகவும், எனினும், 13-14 ஆண்டுக ளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் செயல்பாடு களில் தீவிரமாக பங்கேற்பதை நிறுத்தி விட்டதாகவும், உறுப்பினராக மட்டும் தொடர்ந்த தாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக

மேலும் விவரிக்கும் ஷிண்டே, “நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத் தும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாஜகவுக்கு அரசியல் பலன்  கிடைக்கவில்லை. அதன் விளைவாக, 2004 தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும் பான்மையைப் பெற்றது. எனினும், மிலிந்த் பராண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு ரகசியமாக சதித் திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினர். அது அவர்களுக்கு 2014 மக்கள வைத் தேர்தலில் உதவியது” என்று பிரமாணப் பத்திரத்தில் விவரிக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “2014இல் பாஜக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி நரேந்திர மோடி பிரதமரானார். இதன் விளைவாக பாஜக வின் பின்புலத்தில் செயல்பட்டு வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ்  ஆகிய அனைத்து அழிவு சக்திகளும் திடீரென முன்களத்திற்கு வந்தன” என்று குறிப்பிடுகிறார்.

திடீரென இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது? என்ற கேள்விக்கு பதிலளித்தி ருக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “நான் ஒரு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)-இன் ஆள்; இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவன்; இந்து மதம் உன்னதமான மதம்; அது பயங்கரவாதத்திற்கு எதிரானது; எனவே, ஆர்எஸ்எஸ் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் விஷ யங்கள் மிகவும் மோசமாகிவிட்டன; அவர்கள் (பாஜகவினர்) ஆட்சியில் இருக்க மக்களை பிளவுபடுத்தி, மதத்தின் பேரால் அணி திரட்டுகிறார்கள். எனவே நான் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சுத்திகரிக்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டே வாக்குமூலம் அளித்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் எந்தப் பதிலும் வர வில்லை என்றும் ஷிண்டே கூறியுள்ளார். நீங்கள் கூறுவதை யெல்லாம் எப்படி நம்புவது? என்ற கேள்விக்கு, “சங் பரி வாரில் உள்ள பலருக்கும், என்னைப் போலவே தலைவர்கள் மீது வருத்தம் உள்ளது. ஆனாலும் பொறுமையாக இருக் கிறார்கள். நான் இப்போது பேசி விட்டேன். இதேபோல மற்றவர்களும் பேசுவார்கள். விரைவில் ஒரு வெடிப்பு ஏற்படு வதை நீங்கள் காண்பீர்கள். அப்போது நான் கூறியது உண்மை என்பதை அனை வரும் புரிந்துகொள்வார்கள்” என்றும் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

-நன்றி: தீக்கதிர், 4.9.2022No comments:

Post a Comment