உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுடில்லி, அக். 12- நாட்டின் உச்சநீதிமன்றநீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக் கலாம். தற்போது, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8ஆம் தேதி பணி நிறைவு செய்கிறார். இதனி டையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். 

டி.ஒய். சந்திரசூட்டை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரை கடி தத்தை தலைமை நீதிபதி யு.யு.லலித் ஒன்றிய சட்ட அமைச் சகத்திற்கு அனுப்புகிறார். ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், யு.யு.லலித்திற்கு அடுத்து மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் நவம்பர் 9ஆம் தேதி, நாட்டின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிகாக வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment