ஆளுநர் பயன்படுத்திய 'ஹரிஜன்' வார்த்தை தொல்.திருமாவளவன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

ஆளுநர் பயன்படுத்திய 'ஹரிஜன்' வார்த்தை தொல்.திருமாவளவன் கண்டனம்

சென்னை அக் 26- ஆதிதிரா விடர் எனும் சொல் இங்கே அதிகாரப்பூர்வ மாக நடைமுறையில் இருக்கும்போது, ‘ஹரி ஜன்' எனக் குறிப்பிட்டுப் பேசியது ஏன்? என கேள்வி எழுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதா வது:- 

கடந்த 17ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்துவைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை 'ஹரிஜன்' எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத் தின் உயர்கல்வி குறித்து ஆளுநர் அக்கறை காட்டியிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம். ஆனால், ஆதிதிராவிடர் எனும் சொல் இங்கே அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் இருக்கும் போது, ‘ஹரிஜன்' எனக் குறிப்பிட்டு பேசியது ஏன் என்கிற கேள்வி எழு கிறது? திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்பு தான் காரணமா? அல் லது சனாதன உளவியல் தான் காரணமா?. ஆளு நர் ஏனோதானோ என பேசக்கூடியவரல்ல; பேசவும் கூடாதல்லவா? எனவே, ஆளுநர் எத்த கைய உளவியல் நிலையில் இருந்து அவ்வாறு உரை யாற்றினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டு கிறோம். 

இந்திய அரசு இவ்வ ளவு சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்னரும் அந்த அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் இவ்வாறு பொது வெளி யில், அதுவும் மாணவர்க ளிடையே அந்த சொல் லைப் பயன்படுத்திப் பேசி யிருப்பது சரியானது தானா? என அவர் சிந் திக்க வேண்டும். அவரைப் பின்பற்றி, வேறு யாரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் இருக்க அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment