காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி
சென்னை, அக்.15 ஹிந்தி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு ஜவஹர்லால் நேருவைப் போல பிரதமர் மோடியால் உறுதி அளிக்க முடியுமா என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹிந்தியை எதிர்க் கும் திமுகவும், ஹிந்தியைத் திணித்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத் திருப்பது எந்த அடிப்படையிலானது என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். வரலாற்றை அறியாமல் அரசியல் உள் நோக்கத்துடன் திரிபுவாத கருத்துகளை அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி மொழியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் ஆட்சி எடுத்திருக்கிறது.
பிரதமர் நேரு 1961-இல் கொடுத்த உறுதிமொழியின்படி, ஹிந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று அறுதியிட்டுக் கூறியதை எவராலும் மறுக்க இயலாது.
ஆட்சி மொழிக் குழுத் தலைவராக இருக்கிற அமித்ஷா கூறிய பரிந்துரை களைப் படித்தால் அப்பட்டமாக ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியை மட்டுமே திணிக்கும் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும்.
கடந்த காலத்தில் ஹிந்தி பேசாத மக்களுக்கு நேரு கொடுத்த உறுதியைப் போல மீண்டும் அத்தகைய உறுதியை பிரதமர் மோடியிடமிருந்து பெறுவ தற்காக அண்ணாமலை முயற்சி செய் வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ்.அழகிரி

No comments:
Post a Comment