செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

செய்திச் சுருக்கம்

அதிகரிப்பு

கரோனாவின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளதால், விமான சேவை மற்றும் சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளது

அகற்றுக!

தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி குழுக்களை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

உத்தரவு

கற்றல் மதிப்பீடு தொடர்பாக அரசுப் பள்ளிகளில் 13ஆம் தேதி சிறார் திரைப்படம் திரையிடப்பட வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

நீட்டிக்க...

கரோனா தடுப்பூசியை இலவசமாகப் போடும் காலத்தை நீட்டிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளோம் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மீட்பு

வேலூர் மாவட்டம் திருவலத்தில் கருணை இல்லத்தில் உணவு வழங்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் 69 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

உதவித் தொகை

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவிப்பு.

புதுப்பிக்க...

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அடையாள அட்டை பெற்ற பயனர்கள் அனைவரும் பயோமெட்ரிக், பெயர், முகவரி போன்ற தகவல்களை புதுப்பித்து கொள்ளும்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தி யுள்ளது.

 

No comments:

Post a Comment