இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையா? : மம்தா தாக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையா? : மம்தா தாக்கு

கொல்கத்தா, அக்.31 சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகார மும் கைப்பற்றப்படுவதாக மம்தா தெரிவித்தார்.  கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NUJS) பட்டமளிப்பு விழா  நடை பெற்றது. இதில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதாக கூறி தனது கவலையை எழுப்பினார். 

மேலும் இந்த போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்ச ரித்தார். மேலும் பேசிய மம்தா, "சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படு கிறது. துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் எங்கே போய் விட்டது? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்" என்று தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், "நீதிபதி யு.யு. லலித்தை நான் வாழ்த்த வேண்டும். இரண்டு மாதங்களில், நீதித்துறை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார்" என தெரிவித்தார்.


No comments:

Post a Comment