கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

இரண்டாம் கட்டமாக 500 சந்தாக்கள் சேர்த்து அளிப்பது

தமிழர் தலைவரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்டம் முழுதும் 90 பிரச்சார கூட்டங்களை நடத்துவோம்

கடலூர், அக். 26- கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.10.2022 புதன் காலை 11 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப் பகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாநில இளைஞர் அணி செயலா ளர் தா.சீ.இளந்திரையன் முன்னிலையில் நடை பெற்றது. 

மாவட்ட அமைப்பா ளர் மணிவேல் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் தண்டபாணி, வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், கம்மா புரம் ஒன்றியம் தலைவர் பாவேந்தர் விரும்பி, குறிஞ் சிப்பாடி ஒன்றிய தலை வர் கனகராஜ், ஒன்றிய அமைப்பாளர் சேகர், வடலூர் மோகன், குறிஞ்சிப்பாடி சண்முகம் சுந்த ரம், மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் தமிழன்பன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராமநாதன், இந்திரா நகர் கிளை தலைவர் தங்க பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினர்.

தலைமை வகித்த கழ கப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் இன்னும் நாடு முழுதும் சேர்த்து அளிக்க வேண் டிய முப்பதாயிரம் விடு தலை சந்தாக்களில் கட லூர் மாவட்ட சார்பில் 500 சந்தாக்களுக்கு குறை யாமல் சேர்த்து வழங்கு வது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 சந்தாக் களுக்கு குறையாமல் சேர்த்து அளிப்பது குறித் தும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடு வது குறித்தும் கழக ஆக்கப் பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத் தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழர் தலைவர் ஆசிரியரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட முழுதும் 90 பிரச்சார கூட்டங்களை நடத்துவது என்றும் கட லூர் பண்ருட்டி அண்ணா கிராமம் நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, இந்திரா நகர் வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 15 கூட் டங்களுக்கு குறையாமல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட மாக விடுதலை சந்தா சேர்க்கை 500 சந்தாக்க ளுக்கும் குறையாமல் சேர்த்து அளிப்பது என வும்,

கழகத் தலைவர் ஆசிரி யரின் 90ஆவது பிறந்த நாள் விழாவை மாவட் டம் முழுதும் மரக்கன்று கள் நடுதல் குருதிக் கொடை வழங்குதல் என வும் பள்ளி மாணவர்க ளுக்கு எழுது பொருள்கள் வழங்குவது எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment