செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

செய்திச் சுருக்கம்

தடை நீடிப்பு

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக ஏஅய்சிடிஇ அறிவித்துள்ளது.

எச்சரிக்கை

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணி நேரத்தின் போது மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு விரைவு போக்குவ ரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

பறிமுதல்

தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 169 டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.

குடிநீர்

தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 548 இடங்களில் சுமார் 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என இத்துறை அமைச்சர் கே.என். நேரு தகவல்.

சிறை

ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என சென்னை கோட்ட ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனி பிரிவு

இந்திய விமானப்படையில் பல்வேறு வகையான ஏவுகணைகள், ஆயுதங்களை ஒரே குடையின் கீழ் பயன்படுத்துவதற்காக ‘ஆயுத அமைப்பு கிளை' என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி.

முடக்கம்

சிவசேனாவின் வில் அம்பு சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே உரிமை கோரி வரும் நிலையில், இந்த சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இடஒதுக்கீடு

கருநாடகாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப் பினருக்கான இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிலவில்

நிலவில் அதிகளவில் சோடியம் இருப்பதை சந்திரயான்-2 விண்கலம் கண்டுபிடித்து படம் எடுத்து அனுப்பியுள்ளது.


No comments:

Post a Comment