சென்னை, அக்.14 தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நிறை வேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர் மூலம் தனக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டி ருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்ட,மன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி பிரச்சினையை பட்டிய லிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த கோரிக்கை மனுக்கள் மீது உட னடியாக நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும் பொருட்டு உரு வாக்கப்பட்ட உங்கள் தொகுதி யில் முதலமைச்சர் திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதில் ஒவ்வொரு தொகுதியி லும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்துள்ள முக்கிய கோரிக் கைகள் பட்டியலில் உள்ள பணிகளுக்கான மதிப்பீடுகள் தயார் செய்து ஆய்வு செய்து அரசிற்கு பரிந்துரை செய்திடும் பொருட்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர், அமைச் சர், சட்ட மன்ற உறுப்பினர்கள், துறையை சார்ந்தஉறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அக் குழுக் கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பணிகளின் மீது மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு பணி களுக்கும் அதற்குரிய தோராய மதிப்பீட்டுத் தொகை மற்றும் அதன் மூலம் அடையக்கூடிய வளர்ச்சிக் குறியீடுகள் மற்றும் பயன்கள் போன்ற உரிய காரணங் களுடன் துறை வாரியாக, சட்டமன்ற தொகுதிவாரியாக பரிந் துரை செய்து முழுமையான அறிக்கையினை அரசிற்கு அனுப்பிட வேண்டும்.
மாநில அளவில் சிறப்புத் திட் டச் செயலாக்கத்துறை இத்திட் டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கி ணைப்புத் துறையாக செயல்படும். பரிந்துரை செய்த பணிகளை, மாநில அளவில் துறை வாரியாகவும், மாவட் டம் தொகுதி வாரியாகவும் தொகுக்கப் பட வேண்டும்.
இந்தப் பணிகளில் எந்தெந்தப் பணிகளை வரும் நிதி ஆண்டுகளில் செயல்படுத்திட இயலும் என ஆய்வு செய்திட ஏதுவாக, மாநில அளவிலான பணிகளை தேர்வு செய்திடும் குழு அமைத்து ஆணையிடப்படுகிறது. அரசு தலைமைச் செயலாளர்களா கவும் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, அரசு முதன்மை செய லாளர் உறுப்பினர் செயலாளராக வும் இருப்பார்கள். துறை வாரி யாக தொகுக்கப்பட்ட பணிகளில் இருந்து, எந்தெந்த பணி களை வரும் நிதி ஆண்டுகளில் செயல் படுத்திட இயலும் என்பதை மேற்கண்ட மாநில அளவிலான பணிகளை தேர்வு செய்திடும் குழுவால் இறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment