இந்தியாவில் புதிதாக 862 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

இந்தியாவில் புதிதாக 862 பேருக்கு கரோனா

புதுடில்லி, அக். 26- இந்தியா வில்  24 மணி நேரத்தில் 862 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு  முழுவதும் கரோனா தொற்றால் பாதித்தவர் களின் எண்ணிக்கை 4,46,44,938 ஆக உயர்ந்து உள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,549- ஆக உள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண் ணிக்கை 4,40,93,409- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,980ஆக உயர்ந்தது. இந்தியாவில்  மட்டும் 23,791 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய பாதிப்பும் நேற்று முன் தினத்தை விட சரிந்து 187- ஆக பதிவாகியுள்ளது.  ஒருநாள் பாதிப்பு 198-ஆக இருந்தது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவ ரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில்  ஆண்கள் 109, பெண்கள் 78 என மொத்தம் 187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென் னையில் 49 பேர் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ள னர். கரோனா பாதிப்பில் இருந்து  390- பேர் குணம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர் கள் எண்ணிக்கை 2,736- ஆக உள்ளது. கரோனா பாதிப்பால்  உயிரிழப்பு எதுவும் இல்லை.


No comments:

Post a Comment