நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம் 84 ஆண்டுகளுக்கு பிறகு அபராதத்துடன் திருப்பிக் கொடுத்த பேரன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம் 84 ஆண்டுகளுக்கு பிறகு அபராதத்துடன் திருப்பிக் கொடுத்த பேரன்!

லண்டன், அக். 31- 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கேப்டன் வில்லி யம் ஹாரிசன் என்பவர் ஆங்கில எழுத்தாளர் ரிச் சர்ட் ஜெஃபரீஸ் என்ப வர் எழுதிய ரெட் டீர் (Red Deer)" என்ற புத்த கத்தை படிப்பதற்காக லண்டனிலுள்ள நூலகத்திலிருந்து எடுத்துள்ளார்.

ஆனால் அதனை அவர் திரும்பி கொடுக்க வில்லை. அது அவரிடமே பத்திரமாக இருந்து வந்த நிலையில், 1957ஆம் ஆண்டு அவர் மரண மடைந்துள்ளார். தனது தாத்தாவின் மரணத்திற்கு பிறகு அவருடைய பொருட் களை எல்லாம் எடுத்து பார்க்கையில், அதில் இந்த புத்தகம் இருந்துள் ளது. இந்த புத்தகத்தை கண்டவுடன் பேரன் ஆச் சர்யமானார். மேலும் தனது தாத்தா இதை கொடுக்கவில்லை என்ற போதும், தான் அந்த புத்தகத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதன்படி அந்த நூல கத்திற்கு சென்ற பேரன், தனது தாத்தா எடுத்த புத்தகத்தை திருப்பி கொடுத்துள்ளார். 

மேலும்  84 ஆண்டு களுக்கு பிறகு கொடுத்த தால், அதற்கான அபராத தொகையையும் அவர் செலுத்தியுள்ளார். இது தொடர்பான செய்தியை சம்மந்தப்பட்ட நூலக மான 'யேர்ல்ஸ் டான் கார்னி கீ' என்ற நூலகம், தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

மேலும் இது குறித்து அதில், "இதுபோன்று நிகழ்வுகளை தினந் தோறும் நீங்கள் பார்க்க முடியாது. ரிச்சர்ட் ஜெஃபரீஸால் எழுதப் பட்ட "ரெட் டீர்" என்ற புத்தகம் 84 ஆண்டுகள் மற்றும் இரண்டு வாரங் கள் கழித்து திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிப் பதற்காக எடுத்துச் சென் றவரின் பேரன் பேடி ரியோர்டன், 84 ஆண்டு கள் கழித்து தன் தாத் தாவினால் கடன் வாங் கப்பட்ட இந்த புத்தகத்தை நூலகத்திற்கு, அதற்கு உண்டான அபராத தொகையையும் செலுத்தி திருப்பி கொடுத்துள்ளார்.

வாரத்திற்கு ஒரு பென்னி என்ற வீதத்தில், மொத்தம் 18 புள்ளி 27 பவுண்டுகளை அவர் அப ராதமாக செலுத்தியுள் ளார்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பொதுவாக நூலகத் தில் இருந்து எடுக்கப்படும் புத்தகத்தை படித்து முடித்தவுடனே, அல்லது குறிப்பிட்ட தினங்களிலோ கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால், அபராத தொகை யும் செலுத்தவேண்டும்.

அதன்படி தனது தாத்தா எடுத்த புத்த கத்தை 84 ஆண்டுகளுக்கு பிறகு அபாரத்துடன் செலுத்திய பேரனின் செயல் பெரும் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment