சென்னை ஆற்றங்கரைகளில் 64 ஆயிரம் மரக்கன்றுகள்: மாநகராட்சி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

சென்னை ஆற்றங்கரைகளில் 64 ஆயிரம் மரக்கன்றுகள்: மாநகராட்சி தகவல்

சென்னை,அக்.15 நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் சென்னை ஆற்றங்கரைகளில் 64,663 மரக்கன் றுகள் நடப்பட்டுள்ள தாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநக ராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளதாவது: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்துதல், திடக் கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப் படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆற்றங் கரையில் திரு.வி.க. நகர்பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ் பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பிலும், எம்.ஆர்.டி.எஸ் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.8 கோடி மதிப்பிலும் நடைபாதை அமைத்தல், மரங்கள் நடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மேலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அடை யாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நீளத்தில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, வலதுபுறத்தில் 4 கி.மீ. நீளத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் நடந்து வரு கின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சிக் குட்பட்ட ராயபுரம், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் 4 பகுதிகளில் கரைகளை சமப்படுத்தி, பாரம்பரிய மரக் கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோகமரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு தற்சமயம் கரைகளை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை 2.12 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 2.1 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் இடுகாடு வரை 1.3 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 14,050 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை 5.7 கி.மீ. நீளத்திற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் 21,313 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பிளஸ் 2 முடித்தும் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 10,725

சென்னை, அக்.15 2021-2022-ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-2023-ஆம் கல்வி யாண்டில் உயர் கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேக ரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராதது கண்டறியப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற் போதைய நிலையும் அறியப்பட்டது. இவ்வாறு தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர்.

மீதமுள்ள 6 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, தேர்வில் தோல்வி, உயர்படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் அனுமதிக் காதது, தேர்வு எழுதாதது, உடல் நலமின்மை, தொழில் புரிதல், கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது, அருகாமையில் கல்லூரி இல்லாதது, மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடர இயலாத நிலை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுதவிர, 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலைபேசி இணைப்பு பெறாததாலும், சில காரணங்களினாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

அந்தவகையில் மொத்தம் 10 ஆயிரத்து 725 பேர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய் இருக்கின்றனர். இவர்களில் 2 ஆயிரத்து 711 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. அந்தவகையில், வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முகாம் நடத்தப்பட வேண்டும். அந்த முகாமில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக 2 நாள்களுக்கு முன்னதாக அழைத்து பெற்றோருடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதில் ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய சுகாதார பணிகள், உயர் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளையும் பங்கேற்க செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆலோச னைகளை வழங்கி, அவர்களை உயர்கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிற துறையின் ஒத்துழைப்பு தேவை ஏற்பட்டால், அவர்களையும் அழைத்து மாணவர்கள் பயன்பெற மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment