மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேருக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேருக்கு வாய்ப்பு

சென்னை,அக்.21- அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு கலந்தாய்வில் தேர்ச்சி பெற்ற 565 பேருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை வழங் கினார். 

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளா கத் தில்  2022_-2023 ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கலந் தாய்வு நடைபெற்றது. 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் என மொத்தம் 565 இடங்கள் உள்ளன. அதில் எம்.பி.பி.எஸ் 459,  பி.டி.எஸ்க்கு 106 இடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தமாக 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 19 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 பல் மருத்துவக் கல்லூரி என 58 மருத்துவ கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

 மேலும், 7.5 விழுக் காடும் இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக 2695 மாணவர்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து இருந்தனர். அதில் 2674 மாணவர்கள் தகுதி உடைய வர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 555 இடங்கள் ஒத்துக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 565 இடங்கள் ஒதுக்கப் பட்டன. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில்  தேர்வு செய்யப்பட்ட 565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2022-_2023ஆம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கான 7.5 விழுக் காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் 2695 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 1195 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அதில் 565 இடங்களுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவ படிப்பை பொறுத்த வரை 10,825 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் உள்ளது. அதில் அரசு இடங்கள் மட்டும் எம் பி.பி.எஸ் 6,143 இடங்கள் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் மட்டும் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் 459 இடங்கள் உள்ளன. அதேபோல், பிடிஎஸ் மொத்தம் 2150 இடங்கள் அதில் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 106 இடங்கள் உள்ளது.

இந்த ஆண்டு 200 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டு 555 இடங்கள் கிடைத் தது. இந்த ஆண்டு 565 இடங்கள் கிடைத்துள்ளது. 565 மாணவர் களுக்கும் மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மடிக் கணினி வழங்கப்படும். நீட் தேர்வின் விலக்கு பெறுவதற்கு அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதேபோல், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி செய்யப்பட்ட மாணவர்கள் வேறு கல்லூரியில் படித்து வந்தால் அந்த கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்பிபிஎஸ், பிடிசஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு நேற்று (20.10.2022) நடைபெற்றது. இதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் 1500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 565 இடங்கள் தேர்வு செய்து ஆணை வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளி, நெசவாளர், விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment