பெங்களூரு அக்.15 பிரமாண பத்தி ரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாக பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினருக்கு 2 மாதம் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கருநாடக சட்டசபையில் பெங் களூரு சிக்பேட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வரு கிறார் உதய் கருடாச்சார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாகவும், தன் மீதான வழக்குகளை மூடிமறைத்ததாகவும் கூறி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று (14.10.2022) இறுதி தீர்ப்பு அறிவிக் கப்பட்டது.
இதில், தகவல்களை மூடி மறைத்த வழக்கில் உதய் கருடாச் சாருக்கு 2 மாதங்கள் சிறைத் தண் டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தவிட்டார். அவருக்கு நீதிமன்றம் உடனடியாக பிணை வழங்கியதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
இந்தியாவில் கரோனா 2430
புதுடில்லி, அக் 15 இந்தியாவில் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 618- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில்,
கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ள வர்கள் எண்ணிக்கை 26,618- ஆக உள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட் டவர்கள் எண்ணிக்கை 2,378- ஆக உள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,70,935- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்றைக் கண்டறிய ஒரே நாளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment