பழநி அக்.27- பழநி கழக மாவட்ட தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 20.10.2022 அன்று மாலை 6 மணியளவில் பழநி நகராட்சி விடுதி யில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூட்டத்தின் நோக்க வுரையை திருவெறும்பூர் மு.சேகர்(மாநில தொழிலாளரணி செயலாளர்) எடுத்துரைத் தார். மேலும் மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் விடுதலை சந்தா சேர்ப் பது குறித்த வழிகாட்டல் உரை நிகழ்த்தினார். மேலும் தோழர்கள் அனைவரும் தமிழர் தலைவரின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் விடுதலை சந்தா பெருவாரியாக சேர்த்து வழங்குவோம் என உற்சாகமாக கூறினர். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்டத் தலைவர் சி.பாலசுப்பிரமணி, மேனாள் நகரத் தலைவர் ஜே.ஜோசப், மற்றும் மூத்த தோழர் முனியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 2 தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவை சுயமரியாதை நாளாக கொண் டாடும் வகையில், பொதுக்கூட்டங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், கிளைக்கழகங்ளில் கொடியேற்றுதல் போன்ற நிகழ்சிகள் நடத் துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்), ச.திராவிடச்செல்வன் (மாவட்டத் தலைவர் ப.க) புலவர் வீர கலாநிதி, சி.இராதா கிருட்டிணன், வழக்குரைஞர் செல்லத்துரை, பெ.பத்மநாபன், குண.அறிவழகன், அருண், ச.பாலசுப்பிரமணி, மதன பூபதி, கவிஞர் கோபால், மு.இராசேந்திரபூபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment