மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக 2,213 பேருந்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக 2,213 பேருந்துகள்

சென்னை,அக்.4- மாற்றுத் திறனாளி கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க போக்கு வரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங் களை அறிவித்தாலும், அவர்களால் அதை பயன்படுத்த முடிகிறதா என்பது கேள்விக் குறி. உதாரணத்துக்கு, நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், அனைத்து பேருந்துகளிலும் 25 சதவீத கட்டணம், இருக்கை ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், மாற்றுத் திறனாளிகளால் அந்த சலுகையை பயன்படுத்த முடிவதில்லை. சமூகத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் ஏராள மாக இருக்கின்றன. ஆனாலும், வீட்டில் இருந்து வெளியே வந்தா ல்தான் அந்த வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரை, வீட்டைவிட்டு வெளியே வருவதே அவர்களுக்கு சவாலாக உள்ளது. 

இந்த சூழலில், அனைவரும் அணுகும் வகையிலான பேருந்துகள் அவசியம் என்கிறார் மாற்றுத் திற னாளிகளுக்கான உரிமைகள் கூட் டணியின் உறுப்பினர்ஆர்.சதீஷ்குமார்.

அவர் மேலும் கூறியதாவது: 

பேருந்தில் கைத்தடி வைக்க இடம், பிடித்து ஏறுவதற்கு கைப்பிடி உள் ளிட்டவை இருந்தாலே, அது மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் கொண்ட பேருந்து என்று அரசு வகைப் படுத்துகிறது. இது எப்படி மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்தாக இருக்க முடியும். மாற்றுத் திறனாளிகள் அணு கும் வகையில் தாழ்தள பேருந்துகள் கேட்டால், சாலையில் வேகத்தடை இடையூறாக இருப்பதாக கூறுகின்றனர். பிரதான சாலைகளில் வேகத்தடையே கிடையாது. அப்படி இருந்தாலும், வேகத்தடைக்கான விதிகளை பின்பற்றி அதை அமைக்காதது யார் தவறு.

ஒரு மாற்றுத் திறனாளியாக எனக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை போக்குவரத்துக்கு செலவாகிறது. அனைவரும் பயன்படுத்தும் வகையில் அரசு பேருந்துகள் இருந்தால் இந்த செலவு ரூ.3 ஆயிரமாக குறையும். மெட்ரோ ரயிலில் சில சிக்கல்கள் இருந்தாலும், யார் துணையும் இன்றி என்னால் அதில் சென்று வர முடியும். அதுபோல, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் மாற்றுத் திறனாளிகள் தனியாக வந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராள மான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றை பெற வேண்டுமானால், அடுத்தவர்களின் உதவியின்றி, அவர்கள் தனியாக வீட்டைவிட்டு எளிதில் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொது போக்குவரத்து வாகனங் களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பயண வசதிகளை உறுதி செய்ய வலி யுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக, பேருந்துகள் கொள்முதலுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினர்.


No comments:

Post a Comment