‘2002’ குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ராணா அய்யூபை பழி வாங்குகிறது மோடி அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

‘2002’ குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ராணா அய்யூபை பழி வாங்குகிறது மோடி அரசு!

ரூ.2.69 கோடி கையாடல் செய்ததாக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

 லக்னோ, அக். 17 - அறக்கட்டளை பெயரில் மக்களிடம் பணம் வசூ லித்து மோசடியில் ஈடுபட்டதாக, பெண் பத்திரிகையாளரும், ‘குஜராத் கோப்புகள்’ என்றநூலின் ஆசிரியரு மான ராணாஅய்யூப் மீது, அம லாக்கத் துறைகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

மும்பையைச் சேர்ந்தவர் புகழ் பெற்ற பத்திரிகையாளர் ராணா அய்யூப். ‘தி வாசிங்டன்போஸ்ட்’ மற்றும் புலனாய்வு இதழான தெகல் ஹாஆகியவற்றில் ஏராளமான கட் டுரைகளை எழுதி வருபவர்ஆவார். 

குஜராத் மாநிலத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டு, மோடி முதலமைச்சராக இருந்தபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனப் படுகொலை அரங் கேற்றப்பட்டது. முஸ்லிம்கள் ஆயி ரக்கணக்கில் படுகொலை செய் யப்பட்டனர். அவர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் சூறையாடப்பட் டன. அப்போது, குஜராத் படு கொலையின் பின்னணியில் இருந்த சங்-பரிவாரங்களின் திட்டமிட்ட சதியை ‘குஜராத் கோப்புகள்’ (நிuழீணீக்ஷீணீt திவீறீமீs) என்ற பெயரில் அம்பலப் படுத்தியவரும் ராணா அய்யூப்-தான். 

குறிப்பாக, குஜராத் வன்முறை, அங்கு நடைபெற்ற போலி என் கவுண்ட்டர், குஜராத்தின் மேனாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை உள்ளிட்டவை குறித்து இவர் எழுதிய புலனாய்வு கட்டுரைகள் நாடு முழுவதும் அப்போது பெரும் விவாதங்களை உருவாக்கியது. 

இதன் விளைவாக, தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 2010-ஆம் ஆண்டு சிறை செல்ல நேரிட்டது. 

இந்நிலையில், விகாஸ் சங்கி ரித்தயன் என்பவர் காஜியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் ஒன்றைஅளித்திருந்தார். அதில், “ராணா அய்யூப், அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, நிவாரணப் பணிகளுக்கு மக்களிடம் இருந்து ‘கீட்டோ’ என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டினார். 

ஆனால், இந்த நிதியை நிவாரணப் பணிகளுக்கு இவர் முழுமையாக பயன்படுத்தவில்லை. பி.எம். கேர்ஸ் நிதி மற்றும் முதல மைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.74.50 லட்சம் அனுப்பி உள்ளார். ரூ.50 லட்சத்தை அவரது வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக மாற்றியுள்ளார். வங்கியில் தனியாக ஒரு நடப்புக் கணக்கை தொடங்கி, அதில் அறக்கட்டளைக்கு வசூலித்த நிதியை மாற்றியுள்ளார். 3 வங்கிக் கணக்குகளில் இவர் அறக்கட்டளை பணத்தை சேமித்து வைத்துள்ளார். இதன்மூலம் இவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்” என்று விகாஸ் சங்கி ரித்தயன் கூறியிருந்தார். இதனடிப்படையில், ராணா அய்யூப் மீது, இந்திய தண்டனைச் சட்டம், அய்.டி. சட்டம், கறுப்புப் பணம் சட்டம் ஆகியவற்றின்பல பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. 

இந்நிலையில், அமலாக்கத் துறை தான் பதிவு செய்த வழக்கில், ராணா அய்யூப் மீது 13.10.2022 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முதல் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், ஏப்ரல் 2020 இல் ‘கீட்டோ’ (Ketto) என்ற கிரவுட்பண்டிங் இணைய தளத்தில் ராணா பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் 2.69 கோடி ரூபாயை வசூலித்ததாக ராணா அய்யூப் மீது அமலாக்கத் துறை இயக்குநரகம் குற்றம் சாட்டி யுள்ளது. 

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவு செய்யாமலேயே, வெளிநாட் டிலிருந்து ராணா அய்யூப் நிதி பெற்றதாக கூறியுள்ள அமலாக்கத் துறை, பெறப்பட்ட நன்கொடைகள் ராணாவின் தந்தை மற்றும் சகோ தரியின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவரது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றப் பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் நிலையான வைப்புத்தொகை கணக்கை உருவாக்கி, 50 லட்சம் ரூபாயை புதிய கணக்கிற்கு ராணா மாற்றியுள்ளார். சமூகநலப் பணி களுக்காக 29 லட்சம் ரூபாயை மட் டுமே ராணா பயன்படுத்தியுள்ளார். ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலும் முதல மைச்சரின் நிவாரண நிதியிலும் மொத்தம் 74.50 லட்சம் ரூபாய் வைப்புச் செய்துள்ளார் என்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்கெனவே, ராணா அய்யூப்பின் 3 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 1 கோடியே 77 லட்சத்து 27 ஆயிரத்து 704 மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ. 50 லட்சத்துக்கு கிடைத்த வட்டித் தொகை ஆகிய வற்றை அமலாக்கத்துறை முடக் கியது குறிப்பிடத்தக்கது. இதனி டையே, தன்மீதான அனைத்து குற் றச்சாட்டுகளையும் ராணாஅய்யூப் மறுத்துள்ளார்.


No comments:

Post a Comment