தமிழ்நாடெங்கும் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
கடலூர் - அண்ணா கிராமம்
17.09.2022 அன்று அண்ணா கிராமம் ஒன்றியம் பி.என்.பாளையத்தில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா கிளைத்தலைவர் பெ.இரமேஷ் தலைமையிலும் பண்ருட்டி ஒன்றிய தலைவர் கோ.புத்தன், அண்ணா கிராமம் ஒன்றிய மேனாள் திமுக செயலாளர் நா.பலராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழன்பன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செ.முனியம்மாள், அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் இ.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை யிலும் தந்தை பெரியார் படத்திற்கு மலர் மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது.
இந்நிகழ்வில் அ.ரஞ்சித், பேபி சத்தியகுமார், திமுக செயலாளர் புண்ணியமூர்த்தி எ.தனுஷ் ச.பரிமளா ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அமைப்பாளர் வி.கே.எஸ்.பிர வீன் நன்றி கூறினார்.
உப்புக்கோட்டை
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழாவில்.....வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, உப்புக்கோட்டை அமைப்பாளர் ஆசிர்வாதம், மாவட்ட தலைவர் இரகுநாகநாதன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரேம் குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி, போடி நகர செயலாளர் முருகானந்தம், போடி சுருளிராஜ், தேனி தலைவர் வெங்கடேசன், செயலர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்
விழுப்புரம்
17-09-2022 அன்று காலை ஒன்பது மணி அளவில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி விக்கிரவாண்டியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு விக்ரவாண்டி மேனாள் பேரூராட்சி மன்ற தலைவர் மலர்மன்னன் மாலை அணிவித்தார். மேலும் விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் சுப்பராயன், கார்த்திகேயன், பரத்குமார், மென் பொறியாளர் எஸ்ஆர் நெடுஞ்செழியன், மின் பொறியாளர் எஸ்ஆர் பிரபாகரன், ஓட்டுனர் உதயகுமார், மாற்றுத்திறனாளி அமைப்பின் மாநில தலைவர் இருசன், செல்வகுமாரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமூகநீதி உறுதிமொழி எடுத்தனர்.
மேலும் வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களான மலர்மன்னன் மற்றும் சுப்பராயன் ஆகியோருக்கு தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் .விழாவின் முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
மடிப்பாக்கம்
மடிப்பாக்கம் பாண்டு இல்லத்தில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா கழக கொடி ஏற்றியும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், அனை வருக்கும் இனிப்பு வழங்கியும், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், ஆனந்தன், மணிகண்டன், வசந்தராஜ் உள்ளிட்ட தோழர்களும் பாண்டு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆத்தூர்
அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாள் விழா ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பாக சுமார் 8 இடங்களில் வெகு சிறப்பாக கொண்டாட பெற்றது
ஆத்தூரில் மாவட்ட தலைவர் த.வானவில் தலைமை யிலும், தலைவாசலில் பெரியார் பெருந்தொண்டர் அய்யா பெ.சோமசுந்தரம் தலைமையிலும், வாழப்பாடியில் மண்டல இளைஞரணி செயலாளர் தோழர் ப.வேல்முருகன் தலைமை யிலும் பெத்தநாயக்கன்பாளையத்தில் பொதுக்குழு உறுப் பினர் அ.சுரேஷ் தலைமையிலும் செந்தாரப்பட்டியில் மாவட்ட இளைஞரணி தலைவர் தோழர் இரா.கார்முகின் தலைமையிலும் நடுவலூர் கிராமத்தில் தோழர் அலகுவேல் தலைமையிலும் இலுப்பநத்தம் கிராமத்தில் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் தோழர் கா.பெரியசாமி தலை மையிலும் .பெரியேரி கிராமத்தில் பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் தோழர் இரா.மாயக்கண்ணன் தலைமையிலும் சிறப்பாக தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்சென்னை
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 17.09.2022 நண்பகல் 12.15 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து 100 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் பிற்பகல் 12.40 மணி அளவில் மயிலாப்பூர் வீர பெருமாள் கோவில் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியா ரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மந்தைவெளி வன்னியம்பதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பிற்பகல் 1.15 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தென் சென்னை மாவட்ட கழக மயிலை நொச்சி நகர் பகுதி கழக சார்பில் நொச்சி நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில்( கடற்கரை இணைப்பு சாலை) பெரிய அளவில் நிரந்தர தந்தை பெரியார் நெகிழித்திரை வைத்து மாலை அணிவித்து பிறந்தநாள் விழா பிற்பகல் 1.30 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டம்
தந்தை பெரியாருடைய பிறந்த நாளில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள அவருடைய சிலைக்கு குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாவட்ட தலைவர்
மா.மு.சுப்பிரமணியம் தலைமையிலும் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா.இராஜேஷ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜே.ரி. ஜூலி யஸ், பகுத்தறிவாளர்கழக செயலர் பெரியார்தாஸ் மகளிரணி மாவட்ட தலைவர் இந்திரா மணி, ஒன்றிய செயலாளர் இராஜீவ் லால், மாநகர துணைத் தலைவர் எச்.செய்க்முகமது, கன்னியாகுமரி யுவான்ஸ், பெரியார் வீர விளையாட்டுக் கழக அமைப்பாளர் சிவக்குமார் தோழர்கள் செல்லையன், தங்கராசு, பாலகிருஷ்ணன், தமிழரசன், தமிழ்மதி பி.கென்னடி, சி.அய்சக் நியூட்டன், முத்துவைரவன், அப்பாஜி, காட்வின், அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரம், செண்பகராமன்புதூர், கலிங்கராஜ புரம் ஆகிய பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாருடைய சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய செயலர் குமாரதாஸ், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மகளிரணி அமைப்பாளர் மஞ்சு குமாரதாஸ், குமரி கிளை கழக அமைப்பாளர் யுவான்ஸ், திமுக ஒன்றிய செயலாளர் பாபு, குமரி பேரூராட்சி மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் பெரியாருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், நாகர்கோவில் வடசேரியில் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஏற்பாட்டில் பெரியாரு டைய பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதுபோல குமரி மாவட்டத்தில் தக்கலை, நெய்யூர், மார்த்தாண்டம், சுசீந்திரம் மற்றும் குமரி மாவட்டம் முழுமையும் பெரியாருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் களிமேடு ர.அன்பழகன் ஏற்பாட்டில் மேனாள் உள்ளாட்சித் துறை அமைச்சர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மூவர் பிறந்தநாள், திமுக தொடங்கியநாள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து களிமேடு பெரியார்நகர் திமுக கிளைக் கழகம் சார்பில் களிமேட்டில் கொடியேற்றுதல் நிகழ்வு 17.9.2022 காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம் கலந்துகொண்டு தலைவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.மேலும் திமுக தஞ்சாவூர் மத்திய மாவட்டம் மாணவர் கழக துணை அமைப்பாளர் களிமேடு முனைவர் செல்வ.கலைமணி, கிளைக் கழகச் செயலாளர் (திமுக) க.சுகுமார் உள்ளிட்டோரும்,இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.
இலால்குடி
இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றியத்தில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா வாழ்மானபாளையம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதன்பின்னர் குருவம்பட்டி, அழகிய மணவாளம், பாச்சூர், நொச்சியம், வடக்கிபட்டி,குருவிக்காரன்குளம், மண்ணச் சநல்லூர் ஆகிய இடங்களில் கழக தோழர்களின் இல்லங்கள், கடைவீதியில் கழகக் கொடியேற்றப்பட்டது.

No comments:
Post a Comment