"பெரியார் என்பது கற்சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம்" 'இனமுரசு' சத்யராஜ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

"பெரியார் என்பது கற்சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம்" 'இனமுரசு' சத்யராஜ்

திருச்சி,செப்.19- திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத் தில் மேனாள் மாணவர் கள் சங்கம் சந்திப்பு விழா, பெரியாரின் 144-ஆவது பிறந்தநாள் விழா, சங்கத் தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப் பெரும் விழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைக் கலைஞர் 'இனமுரசு' சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது;- "என்னம்மா கண்ணு சவுக்கியமா? என்று கேட்கும் போது, பிற்படுத் தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் சவுக்கியம் என்று கூற முடிகிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் தான். பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்வது, செருப்பு மாலை போடுவது போன்ற செயல்களை சிலர் செய்கிறார்கள். ஆனால் பெரியார் உயிருடன் இருந்தால், நானே நேராக வந்து நிற்கிறேன், செருப்பு மாலையை என் மீது போடுங்கள் என்று அவரே பெற்றுக் கொள்வார். அப்படிப்பட்ட தைரியசாலி அவர். பெரியார் என்பது வெறும் கற்சிலை அல்ல. அவர் ஒரு தத்துவம், ஒரு கொள்கை, அவர் ஒரு கோட்பாடு. என்னை வேறு ஒரு நடிகருடன் ஒப்பிட்டு, 'நீ நடிப்பில் தாழ்ந்தவன்' என்றோ, படிப்பு, திறமையில் தாழ்ந்தவன் என்றோ கூறலாம். ஆனால் பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்வது என்ன நியாயம்? இதற்காக போராடியவர் தான் தந்தை பெரியார்." இவ்வாறு 'இனமுரசு' சத்யராஜ் பேசினார்.

No comments:

Post a Comment