திராவிட இயக்க பெண்ணுரிமை போராட்டங்களால் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

திராவிட இயக்க பெண்ணுரிமை போராட்டங்களால் பயன்

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு   மாதம் ரூ.1000  வழங்கும் புதுமைப் பெண் திட்டம் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை,செப்.6- அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாண விகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தொகையை மாண விகள் கல்விக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறைசார்பில், ‘புதுமைப்பெண்’ என்ற பெயரில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (5.9.2022) நடை பெற்ற விழாவில், புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முழுவதும் 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார். 

இரு முதலமைச்சர்களும் சேர்ந்து, சென்னையில் 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய புது மைப்பெண் பெட்டகப்பை, வங்கி டெபிட்கார்டு ஆகியவற்றை வழங் கினர். மாதந்தோறும் 7-ஆம் தேதி மாணவிகளின் வங்கிக்கணக்கில் இந்த உதவித் தொகை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாதம் மட்டும், திட்ட தொடக்க விழாவையொட்டி நேற்றே மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது.

திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

அர்விந்த் கெஜ்ரிவால் டில்லி முதலமைச்சர் மட்டுமல்ல. அவர் ஒரு போராளி. தனது அய்ஆர்எஸ் பணியை துறந்துவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். அவரை நாடே உற்று நோக்கி வருகிறது.

‘புதுமைப்பெண்’ திட்டத்தில் இப்போதே, உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுக்கான கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. 76 ஆண்டு களை கடந்து கல்வித் தொண்டாற்றி வரும் பாரதி மகளிர் கல்லூரியில் ஒரு சில கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது என் கவனத்துக்கு வந்தது. உடனடியாக, ரூ.25 கோடியில்33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் மற்றும் 3 ஆசிரியர்அறைகள் கொண்ட, தரைதளத்துடன் கூடிய 3 அடுக்கு கட்டடம் கட்ட உத்தர விட் டுள்ளேன். விரைவில்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

மாதிரிப் பள்ளிகள் 

- தகைசால் பள்ளிகள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 மாதிரிப் பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

வேறுபாடும், மாறுபாடும் இல்லா மல் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையேஇதுதான். இன்று பல்லாயிரக்கணக்கான பெண் கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என் றால், அது திராவிடஇயக்க பெண்ணு ரிமை போராட்டங்களால் விளைந்த பயன்.

மாணவிகளுக்கு ரூ.1,000 இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை கடமையாக நினைக்கிறது. பள் ளியுடன் படிப்பைநிறுத்தும் பெண் ணுக்கு மாதம்ரூ.1,000 கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைவர். இதன்மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, படித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித் துறை மகத்தான சாதனைகளை புரிந் துள்ளது. தற்போது, முதல்கட்ட மாக ரூ.171 கோடியில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த் தப்படும். பள்ளியின் கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல் பாடுகளுடன் சேர்த்து கலை, இலக் கியம், இசை, நடனம், செய்முறைஅறிவியல், விளையாட்டு ஆகியஅனைத்து திறமைகளும் மாணவர்களுக்கு உரு வாக்கப்படும். இவை அனைத்து மாவட் டங்களுக்கும் அடுத்தடுத்து விரிவு படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் 4 ஆண்டு களில் ரூ.150 கோடியில் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும். பேராசிரி யர் அன்பழகனார் பெயரிலான பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.7,500 கோடியில் பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் தொலை நோக்கு பார்வையுடன் தீட்டப்படு கின்றன. சிற்பி கவனமாக சிலையை செதுக்குவதைப்போல் தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி கவனத்துடன் செயல்படுகிறது.

 ஒரு பட்டத்தோடு 

நிறுத்தக் கூடாது

நீங்கள் அனைவரும் ஒரு பட்டத் தோடு நிறுத்திவிடாமல் உயர்கல்வி படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். பெண்களுக்கு பொருளாதார விடுதலை மிக முக்கியம். படிக்கும் காலத்தில் திறமையாகச் செயல்படக்கூடிய பல பெண்கள், திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்குள் முடங்கிவிடுகின்றனர். கல்வி அறிவு, கலைத்திறன், தனித்திறமைகள்தான் யாராலும் அழிக்க முடியாத சொத் துகள்.

புதுமைப்பெண் திட்டத்தை தந்தைக்குரிய கடமையுணர்வுடன் தொடங்கி வைத்துள்ளேன். இந்த உதவித் தொகையை நீங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். உங்களுடைய தாய், தந்தையரின் ஆலோசனையை பெற்று, கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். உங்களை வளர்த் தெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அரசும் இருக்கிறது. புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங் களை கொண்டு வருவோம்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். விழாவில் தமிழ் நாடு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பாராட்டு

விழாவில் பேசிய டில்லி முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'புதுமைப் பெண் திட்டம்' வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் என்று பாராட்டியுள்ளார். 

இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சி கரமான திட்டம் தான் இந்த 'புதுமைப் பெண் திட்டம்'. புதுமைப் பெண் திட்டத்தை துவக்கி வைக்க என்னை அழைத்தபோது உண்மையிலேயே ஆச்சர்யம் ஏற்பட்டது. ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத் துக்கு சென்று பள்ளிகள், மருத்துவ மனைகளை பார்வையிடுவதை இது வரை கண்டதில்லை.

ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டில்லிக்கு வந்து பார்வையிட்டதோடு மட்டும் இல்லாமல், அதே போல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். டில்லியைப் போல் தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாநில அரசுகளும் நல்ல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து இது போன்று நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர், திறமை இருந்தும், வறுமை காரணமாக தங்கள் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவியரின் இடைநிற்றலைத் தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம்.

இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். டில்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண் டும்; அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே!

நல்ல, தரமான, இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் ஒன்றி ணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அரசுப்பள்ளிகளை மூடினால் ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வர்? - அப்படி இருந்தால் நாடு வளராது.

இனி கல்வி சார்ந்த புதிய திட் டங்களை துவக்கும் போதும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன்; நானும் புதிய திட்டங்களை துவக்கி வைக்க டில்லிக்கு வருமாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப் பேன்" என்று பெருமிதத்துடன் பேசினார்.

 

No comments:

Post a Comment