‘ஜீவசமாதி' என்ற பெயரில் இளைஞரை உயிருடன் புதைத்த நிகழ்வு சாமியார்களை கைது செய்த உ.பி. காவல்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

‘ஜீவசமாதி' என்ற பெயரில் இளைஞரை உயிருடன் புதைத்த நிகழ்வு சாமியார்களை கைது செய்த உ.பி. காவல்துறை

லக்னோ, செப்.28 உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே இளைஞர் ஒருவர் ‘ஜீவ சமாதி' அடைந்துவிட்டதாக கூறி சாமியார்கள் பூஜை நடத்திவந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த இடத் திற்கு வந்த காவல்துறையினர் மூங்கில் கம்புகள் மீது பாலீதீன் பைகளை போட்டு அதன்மீது களிமண்ணால் மூடி இருந்த குழியை திறந்து பார்த்தனர்.அந்த குழிக்குள் இருந்து இளைஞர் ஒருவர் காவல்துறை யினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத் திய விசாரணையில், தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஷுபம் என்பவர் தனது தாயார் மறைவுக்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக ஊருக்கு வெளியே குடிசை போட்டு காளி வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடவுள் வழிபாட்டில் மிகுந்த நாட்டம் கொண்ட அவரிடம் நவராத்திரியின் போது ஜீவசமாதி அடைபவர்கள் முக்தி பெறு வார்கள் என்று சில சாமியார்கள் கூறி யுள்ளனர்.

நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருக்கும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர் சாமியார்களின் இந்த பேச்சை நம்பி முக்தி அடைய குழிக்குள் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில், காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கிடைக்கவே சரியான நேரத்தில் வந்து அந்த இளைஞரை உயிருடன் மீட்டதுடன் சாமியார்கள், இளைஞரின் உறவி னர்கள் மற்றும் அந்த இளைஞர் என அய்ந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment