சமையல் எரிவாயு உருளை - ஒன்றிய அரசு கட்டுப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

சமையல் எரிவாயு உருளை - ஒன்றிய அரசு கட்டுப்பாடு

மும்பை, செப்.30 வீட்டு உபயோகத் திற்காக வழங்கப்படும் சமையல் எரி வாயு உருளை (14.2 கிலோ) சட்ட விரோதமாக வணிக நோக்கத்திற்காக கடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் பல நாட் களாக புகார் கூறி வருகின்றன. முக்கி யமாக உணவு விடுதிகள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றிற்கு இந்த எரிவாயு உருளை பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்த முறை கேடுகளை தடுக்க பொதுவான அடிப் படையில் ஒரு வாடிக்கையாளருக்கு 14.2 கிலோ எரிவாயு உருளையை ஆண்டுக்கு 15 ஆகவும், அதிகபட்சமாக மாதம் 2 முறை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதிமுறைகளின்படி, அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என்று கருத்து பரவியது. எனவே இதை தடுக்கும் நோக்கத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 15 எரிவாயு உருளைகளுக்கு மேல் தேவைப்பட் டால், அவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மானியம் அனைத்தையும் பொருத்தினால், அது 12 பேருக்கும் கிடைக்கும். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் எச்பி கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

புதிய விதிகளின்படி, ரேசன் முறையில், ஒரு மாதத்திற்கு ஒரு இணைப்புக்கு இரண்டு எரிவாயு உருளைகள் மட்டுமே கிடைக்கும். இதற்கிடையில், எந்த சூழ்நிலையிலும் இந்த எண்ணிக்கை ஒரு வருடத்தில் 15அய் தாண்டக்கூடாது. ஒரு வாடிக்கையாளர் எரிவாயு விலைக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்றால், அவர் ஆதாரத்தை அளித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அப் போது தான் அந்த வாடிக்கையாளர் கூடுதல் நிரப்புதலைப் பெற முடியும். இவ்வாறு வீட்டுக்கு ஒதுக்கீடு செய்யும் எரிவாயு உருளைகளை வணிக லாபத்திற்காக விற்பனை செய்தால் சட்டவிரோதமா னது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக் கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவ னங்களின் நிதிச்சுமையும் அதிகரித்துள் ளது. எனவே தவறான பயன்பாடு மற் றும் வீண் செய்வதை தடுக்கவே இந்த முயற்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment