எஸ்.பாலபோதி-த.கை.வளர்மதி இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

எஸ்.பாலபோதி-த.கை.வளர்மதி இணையேற்பு விழா

கோலார், செப். 19- கோலார் தங்க வயல் சுயமரியாதை சுடரொளி கள் வி.அய்.குப்பு சாமி-எல்லம் மாள், வி.வடிவேல்-வாழும் கண் ணம்மாள் அவர்களின் பெயர்த்தி, கு.கைவல்யம்-வாழும் தயாநிதி அவர்களின் மகள் த.கை.வளர்மதிக்கும்-கருநாடக மாநிலம் கோலார் தங்கவயல் மறைந்த பவுத்த சிந்தனையாளர் இ.நா.அய்யாகண்ணு லோக நாதன் சரோஜினி ஆகியோரது பெயரன், மறைந்த விண் வெளி விஞ்ஞானி, லோக.எஸ்வந்த்- -வாழும் புஷ்பராணி அவர் களின் மகன் எஸ்.பாலபோதி ஆகியோர் இணையேற்பு நிகழ்ச்சி தென் இந்திய பவுத்த சங்கம் மன்றத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் பேராசிரியர் கு.வணங்கா முடி, திராவிடர் கழக ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந் தன், மேனாள் முதல்நிலைக் கல்லூரி தங்கவயல் வழக்குரை ஞர் சி.கிருஷ்ணகுமார் ஆகி யோர் முன்னிலையில் இந்திய பவுத்த சங்க பொது செயலாளர் துரை.ராஜேந்திரன் மணமக் களுக்கு உறுதி மொழியை கூற செய்து இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

அதனை தொடர்ந்து மண மக்களை வாழ்த்தும் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 

இந்நிழ்ச்சிக்கு கருநாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை தாங் கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆ.இராவ ணன் வரவேற்றார்.

நாத்திக சிறீதர் தந்தை பெரியார் பாடலை பாடினார் தொடர்ந்து மேனாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வழக்குரைஞர் தி.கிள்ளிவள வன், மருத்துவர் தனசேகர், ஏ.டி.ஆனந்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் திமுக, வழக்குரை ஞர் முனைவர் சி.கிருட்டிணக் குமார் மேனாள் முதல்நிலைக் கல்லூரி தங்கவயல், துரை.ராசேந்திரன் இந்திய பவுத்த சங்க பொதுச்செயலாளர் ஆகி யோர் வாழ்த்துரை ஆற்றினர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமைசெயராமன் படித்து காட்டி வாழ்த்து மடலை மண மக்களுக்கு வழங்கி மணமக்க ளின் பெற்றோர்களுக்கு தலைமை கழகம் சார்பில் சால்வை போர்த்தி மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 

இறுதியாக ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வரும் நீண்டநாள் கோலார் தங்கவயலில் கல்லூரியில் பணி யாற்றிய பேராசிரியர் கு.வணங் காமுடி மணமக்களை வாழ்த்தி பேசுகையில் அண்ணால் அம் பேத்கர், தந்தைபெரியார், ஆசிரியர் வீரமணி ஆகியோர் கோலார் தங்கவயல் பகுதிக்கு வந்து சென்ற வரலாற்று செய் திகளையெல்லாம் சொல்லி மணமக்கள் பெற்றோர் பாரம் பரிய சுயமரியாதை குடும்பம் அந்த வரிசையில் மணமக்கள் வளர்மதி-பாலபோதி இணை யேற்பு நிகழ்வு சிறப்புக்குரியது. மணமக்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி பேசினார்.

இந் நிகழ்ச்சியில் கருநாடக மாநில திராவிடர் கழக துணைத் தலைவர் வீ.மு.வேலு,ஒசூர் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன், தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்திலிபன், மாவட்ட மணவரணி தலைவர் பூபதிராஜா, கர்நாடக மாநில இளைஞரணி தலைவர் குணசேகர் செயலாளர் போட்டோ புஸ்பராஜ், திருவள்ளுவர் சங்கம் தலைவர் கி.சு.இளங்கோவன், முத்துமணி, கவிஞர் காசிநாதன், கிருபானந்தன் மற்றும் மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியாக தங்கவயல் திமுக பொறுப்புகுழு உறுப்பின ரும், முரசொலி முகவர் கு.அறி வழகன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவழகன்,கரிகாலவளவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந் தனர்.

கோலார் தங்கவயல் "கைவல் யம் பயிற்சி பட்டறை" ஆண்டு தோறும் தந்தைபெரியார் பிறந்த நாள் விருது வழங்கும் நிகழ்வில் இந்தாண்டு தந்தைபெரியார் விருது கோ.சாரங்கபாணி அவர்களுக்கும்,பேரறிஞர் அண்ணா விருது வழக்குரைஞர் பா.மணிவண்ணன் அவர்களுக்கும்,கலைஞர் விருது ஏ.வி.மதியழகன் அவர் களுக்கும்,கைவல்யம் விருது ஆர்.குருசாமி அவர்களுக்கும் வழங்கபட்டது.விருது பெற்ற வர்கள் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு நினைவுபரிசினை மாநில அமைப்பு செயளாலர் ஊமைசெயராமனிடம் வழங்கி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment