அறிவியல் ஆய்வாளர்களுக்கு சுழற்சி வேகத்தில் குழப்பத்தை உண்டாக்கிய பூமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

அறிவியல் ஆய்வாளர்களுக்கு சுழற்சி வேகத்தில் குழப்பத்தை உண்டாக்கிய பூமி

வேகமாக சுழன்று குழப்பத்தை ஏற்படுத்திய பூமி: 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து, குறுகிய நாளில் சுழன்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பூமி தொடர்ந்து இதே வேகத்தில் சுழன்றால் அது எதிர்மறை லீப் விநாடிகளின் அறிமுகத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஜூலை 29ஆம் தேதி, பூமி 24 மணி நேரத்திற்கு முன்பே தனது சுழற்சியை  முடித்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நாம் வாழ்ந்து வரும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதே ஒரு ஆண்டு ஆகும். அதேபோல பூமி தன்னை தானே சுற்றி வருகிறது. பூமி ஒரு முறை தன்னை தானே சுற்றி வரச் சரியாக 24 மணி நேரம் ஆகும். பூமி தன்னைத்தானே 360 டிகிரி சுற்றி வர 24 மணி நேரம். எனவே கோண வேகம்=360/24= மணிக்கு 15 டிகிரி. இந்த சுற்றுதல்தான், பூமியின் இரவையும் பகலையும் தீர்மானிக்கிறது.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 149.6 மில்லியன் கி.மீ. அதாவது, பூமத்திய ரேகையின் மேல் இருந்து சுற்றினால்,  பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. எனவே, வேகம் =மணிக்கு 1669.79 கிமீ. பூமி சூரியனைச் சுற்றும் ஒரு ஆண்டின் சுற்றுப்பாதை ஒரு வட்டம் என்று வைத்துக் கொண்டால் அதன் சுற்றளவு 940.34 மில்லியன் கி.மீ. ஒரு வருடத்துக்கு 365ஜ் 24=8760 மணி நேரம். எனவே பூமி சூரியனைச் சுற்றும் வேகம் = மணிக்கு 1.07 லட்சம் கி.மீ. என கணக்கிடப் படுகிறது.

ஆனால், கடந்த  ஜூலை 29 அன்று, பூமி அதன் நிலையான 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகளில் முழு சுழற்சியை முடித்த தால், குறுகிய நாளுக்கான அதன் சாதனையை முறியடித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment