ஆஸ்திரேலியா - சிட்னி தமிழ் வானொலி நிலையத்திற்கு
முனைவர் கார்த்திக் ராம்மனோகரன் பேட்டி
கான்பரா, செப்.20 தந்தை பெரியார் மற்ற தலைவர் களைவிட தனித்தன்மை வாய்ந்தவர் என்பதற்கான காரணங்களை பேட்டியில் கூறினார் முனைவர் கார்த்திக் ராம்மனோகரன்.
ஆஸ்திரேலியா - சிட்னி வானொலி நிலையத்திற்குப் பேட்டி
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் திராவிட அரசியலின் தந்தை என்று பார்க்கப்படுகிறார். பெரியார் அவர்களின் சமூகநீதி சார்ந்த கொள்கை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவரும் அதேவேளை யில், அவரின் கொள்கை அவ்வப்பொழுது சர்ச்சை களையும் ஏற்படுத்துவது உண்டு.
இந்தப் பின்னணியில் ‘‘Periyar: A Study in Political Atheism'' எனும் புத்தகத்தின் ஆசிரியரும், இங்கிலாந்தில் Wolverhampton பல்கலைக் கழகத்தில் ஆய்வில் ஈடு பட்டிருப்பவருமான முனைவர் கார்த்திக் ராம்மனோகரன் அவர்களை ஆஸ்திரேலியா - சிட்னி வானொலி நிலைய நெறியாளர் றைசெல் அவர்கள் பேட்டி எடுத்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
றைசெல்: வணக்கம் கார்த்திக்.
‘‘Periyar: A Study in Political Atheism’’
கார்த்திக்: வணக்கம்
றைசெல்: ‘‘Periyar: A Study in Political Atheism’’ அல்லது ‘‘பெரியார் அரசியல் நாத்திகம்'' என்று வேண்டு மானால் தமிழில் சொல்லலாம். இப்படியான ஒரு புத்தகம் ஆங்கிலத்தில், மேற்கத்திய சமூகத்தினருக்கு - கல்வி சார்ந்த அறிவாளர்களுக்காக எழுதப்பட்டு இருக்கிறது என்று அது முன்வைக்கப்படுகிறது.
அப்படியானால் பெரியாரைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லவேண்டிய தேவையின் முக்கியத்துவம் என்ன?
கார்த்திக்: இப்பொழுது மேற்கத்திய நாடுகளில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அதை நீங்கள் ஆஸ்திரேலியா, பிரான்சு, கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பார்க்கலாம்.
அது என்னவென்றால், பன்முகக் கலாச்சாரம். இந்த பன்முகக் கலாச்சாரத்தில், மதத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்கிற கேள்வி எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது.
இதில் ஒரு தரப்பினர் என்ன சொல்வார்கள் என்றால், மதத்திற்கு சமூகத்தில், அரசியலில் இடம் இருக்கக்கூடாது. அவர்களுடைய பார்வை எல்லாம் மதத்தை மட்டும்தான் விமரிசிப்பதாக இருக்கும். அவர்களை நாம் புதிய நாத்திகர்கள் என்று சொல்வோம். ஸ்டீபன் ஹாக்கிங், கிறிஸ்டோபர் ரிச்சின்ஸ், இவிண்ட் திங்கர்ஸ் இதுபோன்ற சில சிந்தனைவாதிகள்.
இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், மதம் ஒரு முக்கியமான கலாச்சார அடையாளம், அதனால் அதை நாம் விமரிசிக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வாதமும் சில தரப்பினரிடம் இருக்கிறது.
அவர்களை பரந்த மனப்பான்மையில் பார்த்தால், மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் என்று பார்க்கலாம்; சிலர் கடுமையான மதச்சார்பின்மைவாதி என்ற அடையாளத்தில் கூட இருக்கிறார்கள்.
பெரியாருடைய கொள்கைகள், மேற்கத்திய சமூகத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தாக இருக்கிறது
இந்த இரண்டு தரப்பினரையும் தாண்டி, பெரியாரு டைய கொள்கைகள், மேற்கத்திய சமூகத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தாக இருக்கிறது என்பதுதான் நான் எழுதிய புத்தகத்தினுடைய அபிப் பிராயம். அதைத்தான் நான் அரசியல் நாகரிகம் என்று சொல்லியிருக்கிறேன்.
அதாவது, பெரியார் அவர்கள், மதத்தின்மீது வைக் கின்ற விமர்சனம் என்பது, கடவுள் இல்லை, சாஸ்திரங்கள் தவறு என்று சொல்வது மட்டும் கிடையாது.
இது அடிப்படையில், அரசியல் மற்றும் சமூகத்தில் இருக்கின்ற ஓர் ஆதிக்கத்தை பெரியார் அவர்கள், மதத்தை விமர்சிப்பதின்மூலமாக விமர்சிக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டும் அல்லாமல், இன்றைக்கு மதம், கலாச்சார அடையாளத்தோடு கிராஃப்பல் செய்து கொண்டிருக்கின்ற மேற்கத்திய நாடுகளுக்கும் பெரியா ருடைய முன்னோக்கு மிகவும் சுவாரசியமாகவும், மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது என்பதுதான் இந்த புத்தகத்தினுடைய கருத்து.
எந்தத் தலைவருக்கும் இல்லாத ஒரு தனித்துவம் அல்லது சர்ச்சை பெரியாரைச் சுற்றியே இருக்கிறதே,
அதற்கு என்ன காரணம்?
றைசெல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெரியார் அவர்கள் திராவிட சிந்தனையின் தந்தை என்று சொல்லலாம். ஆனால், இப்பொழுது பெரியார் அவர்கள் சர்ச்சைக்குரிய தலைவராக இருக்கிறார்; அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும்கூட தொடர்ந்து பெரியார் என்றால், அதிருகிறது; அது பாசிட்டிவாகவும் இருக்கலாம் அல்லது நெகடிவ்வாகவும் இருக்கலாம். ஒரு தரப்பு எதிர்க்கிறது; இன்னொரு பெரிய தரப்பு ஆதரிக்கிறது என்கிற பார்வை போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இதுபோன்று மற்ற தலைவர்களுக்கு இதுவரை நிகழவில்லை. அவர்கள் சமகாலத்தில் வாழ்ந்த தலைவர் களாக இருக்கட்டும்; அல்லது பெரியாருக்கு முன், பின் வாழ்ந்த ஜீவா, மறைமலையடிகள், சிங்காரவேலரோ என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யாருக்கும் இல்லாத ஒரு தனித்துவம் அல்லது சர்ச்சை பெரியாரைச் சுற்றியே இருக்கிறதே, அதற்கு என்ன காரணம்?
பெரியார் அவர்கள்,
வெகுமக்கள் இயக்கத்தின் தலைவர்
கார்த்திக்: இது ஒரு முக்கியமான கேள்வி. ஜீவா, சிங்காரவேலர், மறைமலையடிகள் போன்ற தலைவர்கள் ஆக பெரும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய அறிவுசார் பங்களிப்பில் நமக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் என்னவென்றால், பெரியாரிட மிருந்து அவர்களை என்ன வேறுபடுத்திக் காட்டுகிறது என்றால், பெரியார் அவர்கள், வெகுமக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்தார்.
1920 ஆம் ஆண்டு தொடங்கி 1973 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையில், பெரியார் அவர்கள், பொது மக்களுக்காக ஏதாவது ஒரு கிளர்ச்சியை செய்துகொண் டிருந்தார். என்றைக்கும் அவருக்கு மக்களின் ஆதரவு இருந்துகொண்டே இருந்தது.
மேற்கத்திய சிந்தனையாளர் ஃபேனட் டேட்
இதைத்தான் மேற்கத்திய சிந்தனையாளர் ஃபேனட் டேட் அவர்கள், பெரியாரைப்பற்றி என்ன சொல்கிறார் என்றால், பெரியார் பேசிய மொழி, அவர் பேசிய விஷயங்கள் மிகவும் தத்துவார்த்தமாகவும், மிகவும் சிக்கலாகவும், அறிவுசார்ந்து இருந்தது இல்லை. எப்பொழுதும் முக்கியமான, சிக்கலான விஷயங்களை, மக்களுக்குப் புரிகின்ற மொழியில், மக்களோடு மக்களாய் பேசக்கூடிய தலைவராக இருந்தார்.
பெரியாருடைய கருத்துகள், அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எழுச்சியூட்டக் கூடி யதாக இருந்ததோ, அதேபோன்று இந்தக் காலகட்டத் திலும் அதே தன்மை இருந்துகொண்டிருக்கிறது.
இது ஆதிக்க சக்திகளுக்கோ, ஜாதீய சக்திகளுக்கோ, ஆணாதிக்க சக்திகளுக்கோ பெரும் உறுத்தலாக இருந்துகொண்டே இருக்கிறது.
திராவிட அரசியலுக்கு, தமிழ்நாடு அரசியலுக்கு அசைக்க முடியாத ஓர் உருவமாக இருக்கிறார்
அதேபோல, பெரியாருடைய அரசியல் மரபை தமிழ்நாட்டில் நீங்கள் பார்த்தீர்களேயானால், அது மிகவும் வலுவாக திராவிட அரசியலினால் நிறுவப்பட்டு இருக்கிறது. இப்பொழுது பெரியாருடைய கொள்கை களை நூறு சதவிகிதம் பின்பற்றுகிறார்களா என்றால், அது ஒரு கேள்விக் குறிதான்.
பெரியார் இன்றைக்கும் திராவிட அரசியலுக்கு, தமிழ் நாடு அரசியலுக்கு அசைக்க முடியாத ஓர் உருவமாக இருக்கிறார். அதுதான் தமிழ்நாட்டில், திராவிட அரசி யலை யார் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, பெரியாரை அட்டாக் செய்துதான் ஆரம்பிக்கிறார்கள்.
றைசெல்: இந்தியாவைப் பொறுத்த அளவில், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட மக் களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்கள். சம காலத்தில் வாழ்ந்த தலைவர்கள். இப்பொழுது நவீன இந்தியாவில், அம்பேத்கர் கொண்டாடப்படுகிற அளவிற்கு, பெரியார் கொண்டாடப்படவில்லை; ஆனால், பெரியாரை வெறுக் கின்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; இப்படியான ஒரு முரண்பாடு இருக்கிறதே. இரண்டு தலைவர்களுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டு இருக்கிறார்கள்; ஏன் பெரியார்மீது இப்படியான வெறுப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது?
கார்த்திக்: டாக்டர் அம்பேத்கர் அவர்கள், மிகப்பெரிய சட்டமேதை, அறிஞர், மிகப்பெரிய சிந்தனையாளர் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அவர் தன் சமூகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பெண்கள் எல்லோ ருக்கும் சமமான சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மிகவும் முயற்சி செய்திருக்கிறார் என்பதும் நமக்குத் தெரிந்த வரலாறுதான்.
ஆனால், எதிர்பாராதவிதமாக என்னாயிற்று என் றால், டாக்டர் அம்பேத்கர் அவர்களை, தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர் என்று சுருக்கக்கூடிய தன்மை ஆதிக்க சக்திகளிடமும் இருக்கிறது; அவரைப் பின்பற்றுகிறவர் களிடமும் இருக்கிறது. அதற்குப் பின் அரசியலும் இருக்கிறது. அதற்குள் நாம் போகவேண்டாம்.
அவர் ஒரு வாக்கு வங்கித் தலைவராக ஆகிவிட்டார். இந்த சமுதாயத்தினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்றால், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்; அம்பேத்கர் பெயரில் ஏதாவது ஒன்றைத் தொடங்கவேண்டும்; அப்பொழுதுதான் அந்த சமுதாயத் தினரின் வாக்குகள் நமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
எந்த ஒரு ஜாதியோ, எந்த ஒரு சமூகமோ பெரியார் எங்களுடைய தலைவர் என்று சொல்ல முடியாது
ஆனால், பெரியாரைப் பொறுத்தவரைப் பார்த்தீர் களேயானால், எந்த ஒரு ஜாதியோ, எந்த ஒரு சமூகமோ பெரியார் எங்களுடைய தலைவர்; எங்களுக்கு மட்டும்தான் தலைவர்; எங்களுடைய வாக்கு வங்கியின் சின்னம் என்று கொண்டாட முடியாது.
றைசெல்: ஆனால், பிற்படுத்தப்பட்டவர்கள், திராவி டர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள் பெரியா ரைக் கொண்டாடுகிறார்களே?
ஜாதியை எதிர்க்கிறவர்களுடைய தலைவராகத்தான் பெரியார் இன்றைக்கும் இருக்கிறார்
கார்த்திக் : பல ஜாதி சமூகங்களுடைய தலைவராகத் தான் பெரியார் இருக்கிறார். குறிப்பாக, பல ஜாதிகளி லிருந்து, ஜாதியை எதிர்க்கிறவர்களுடைய தலைவராகத் தான் பெரியார் இன்றைக்கும் இருக்கிறார்.
இது பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் மட்டும் இல்லை; தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பெரியாரின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். உயர்ந்த ஜாதியினரிலும் பெரியாருடைய ஆதரவாளர் கள் இருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில், நிறைய பார்ப்பனர்கள்கூட பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டு, உண்மையான முற்போக்கு உருவமாகத்தான் பார்க்கிறார்கள்.
பெரியார் அவர்கள், குறிப்பிட்ட நிலையைக் கடந்து சென்றுவிட்டார்; ஆகவே, ஒரு பக்கம் அவருடைய தாக்கம் என்பது மிகப்பரவலாக இருந்தாலும், அவருக்கு எந்தக் குறிப்பிட்ட சுய எதிர்ப்பார்ப்பும் இல்லாததினால், அவர்மீது தாக்குதலும் எளிமையாக இருக்கிறது.
உதாரணத்திற்கு காரல் மார்க்ஸ் போன்று. காரல் மார்க்சை எந்த ஒரு தேசமோ, எந்த ஒரு தேசிய இனமோ, எந்த ஒரு சமூகமோ எங்களுக்குத்தான் சொந்தம் என்று கொண்டாட முடியாதோ - அதேபோன்றுதான் பெரியாரை யும் கொண்டாட முடியாது.
அதனால், பெரியாருடைய தாக்கம் பரவலாகப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது; அவர்மீது பல்முனை தாக்குதல் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
பெரியார் அவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடவில்லை என்கிற குற்றச்சாட்டு,
விமர்சனம் இருக்கிறதே?
றைசெல்: தாழ்த்தப்பட்டவர்கள்பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்; பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கின்ற குற்றச் சாட்டு, அவ்வப்பொழுது வைக்கப்படுகிறது. பெரியாரைப் பொறுத்தளவில், வைக்கம் வீரர் என்ற பின்னணியில் பார்த்தால்கூட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடு பட்டு இருக்கிறார்; பஞ்சமர் என்கிற ஆதிதிராவிடர் என்கிறவர்களை நீதிக்கட்சியினர் ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
பெரியார் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர் களுக்கு அதிகம் செய்திருக்கிறாரே தவிர, தாழ்த்தப் பட்டவர்களுக்கு செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு, விமர்சனம் இருக்கிறதே?
கார்த்திக்: இந்தக் குற்றச்சாட்டு, விமர்சனங்கள் சில இடங்களில் இருந்து வந்து, அது ஊதிப் பெரிதாக்கப் படுகிறதே தவிர, அது ஒரு பொதுவான கருத்து தாழ்த் தப்பட்டவர்கள் மத்தியில், என்று நான் சொல்லமாட்டேன்.
தமிழ்நாட்டினுடைய ஆக சிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவரான எழுச்சித் தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள்,
‘‘என்னைப் பொறுத்தவரை அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் வித்தியாசம் இல்லை'' என்று வெளிப் படையாகச் சொல்லியிருக்கிறார்.
அதேபோல, அருந்ததி மக்களின் தலைவரான அதியமான், மணிமதிவண்ணன் போன்றவர்கள் பெரியாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுகிறார்கள்.
ஏனென்றால், பெரியார் அவர்கள், அருந்ததி சமுதா யத்தினருக்காகப் பாடுபட்டு இருக்கிறார் என்று சொல் கிறார்கள்.
தாழ்த்தப்பட்டோர் விமர்சனம் என்பது சில தரப்பினரிடமிருந்துதான் வருகிறதே தவிர, பொதுவாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களோ, சிந்தனையாளர்களோ பெரியாரை எதிர்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால், நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்.
பெரியாரை, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என்று ஒரு கற்பனையை உருவாக்கவேண்டும் என்று சில தரப்பினரிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றது. அது தவறு என்றுதான் நான் சொல்வேன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறார்
ஏனென்றால், பெரியாருடைய வரலாறை பார்த்தீர் களேயானால், என்றைக்கும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக் களுக்கும் சண்டை வரும்பொழுது, பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் பக்கம்தான் வலுவாக நின்றிருக்கிறார்.
அதேபோன்று அவர், தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் தன்மான உள்ள தமிழர்களாகப் பார்க்கிறார். பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை அடிக்கடி திட்டிக் கொண்டுதான் இருந்தார்.
நீங்கள் என்னடா பெரிதாக, தாழ்த்தப்பட்ட மக்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்கள்; அவர்கள் தான் சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் இருக் கிறார்கள். நீங்கள் இன்னும் ஜாதித்தன்மைக்கு அடிமை யாக இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ஆகவே, பெரியாருடைய விமர்சனம், பெரியாரு டைய அரசியல் என்றைக்குமே முதலில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காகத்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று வருகிறது.
இட ஒதுக்கீடு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், பெரியார் அவர்கள், மற்ற சமுதாயத்தினருக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு கண்டிப்பாக இட ஒதுக்கீடு தேவை என்று சொல்கிறார்.
ஆகவே, பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த மக்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்கு ஆதரவாக வலுவாக இருந்திருக்கிறார். நன்றி!
- இவ்வாறு ‘‘றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ: கி ஷிtuபீஹ் வீஸீ றிஷீறீவீtவீநீணீறீ கிtலீமீவீsனீ’’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் முனைவர் கார்த்திக் ராம் மனோகரன் அவர்கள் தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment