பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே பெரியார், அண்ணா பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே பெரியார், அண்ணா பேச்சுப் போட்டி

சென்னை, செப். 13- பெரியார், அண்ணா பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு பேச்சு போட்டி குறித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 

2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, பெரியார், அண்ணா பிறந்த நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறுகிறது

அண்ணா பிறந்த நாளான வருகிற 15ஆம் தேதி நடைபெறும் போட்டி: 

பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. மாணவர்களுக்கு அண்ணா, 2.அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 3.அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணா வழியில் அயராது உயரும்! 4.அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5. அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும், 5.அண்ணாவின் அடிச்சுவட்டில்...

மேலும், பெரியார் பிறந்த நாளான வருகிற 17ஆம் தேதி நடைபெறும் போட்டி: 

பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் 1.பெண்ணடிமை தீருமட்டும், 1.பெண் ஏன் அடிமையானாள்?, 2.தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 2.இனிவரும் உலகம், 3.தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 3.சமுதாய விஞ்ஞானி பெரியார், 4.பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும், 4.உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6.மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார்

மேற்கண்ட தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment