காரை பின்னோக்கி இயக்கி இளைஞர் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

காரை பின்னோக்கி இயக்கி இளைஞர் சாதனை

எடப்பாடி அருகே 16 கிலோமீட்டர் தூரம் காரை பின்னோக்கி ஓட்டி இளைஞர் சாதனை படைத்து, கேரள இளைஞரின் சாதனையை முறியடித்தார்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதி யைச் சேர்ந்தவர் நெசவுத்தொழிலாளியான பூபதி. இவரது மகன் சந்திரமவுலி (வயது 35). சிறு வயது முதலே கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சந்திரமவுலி சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தி புதியதொரு சாதனை செய்ய முயற்சித்து வந்தார்.

இந்நிலையில் எடப்பாடி புறவழிச்சாலையில் நடைபெற்ற நிகழ்வில், 16 கிலோமீட்டர் 140 மீட்டர் தூரத்தினை 29 நிமிடம் 10 வினாடிகளில் தனது காரை அங்கீகரிக்கப்பட்ட நடுவர் வழக்குரைஞர் குமார் முன்னிலையில், பின்னோக்கி ஓட்டி சாதனை நிகழ்த் திக் காட்டினார்.

ஏற்கெனவே கேரள மாநிலம், பந்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த டேசன் தாமஸ் என்பவர் 30 நிமிடங்களில் 14 கிலோமீட்டர் தூரத்தினை காரில் பின்னோக்கி ஓட்டிய சாதனையை முறியடித்து சந்திரமவுலி புதிய சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை புரிந்த இளைஞர் சந்திர மவுலியை திமுக மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி, எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா, நங்கவள்ளி திமுக ஒன்றிய செயலாளர் சின்னு (எ) அர்த்தநாரீஸ் வரன், அவைத் தலைவர் ராஜு, சேட்டு, எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் வாழ்த்தி, பாராட்டினர்.


No comments:

Post a Comment