பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும் சீதாராம் யெச்சூரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும் சீதாராம் யெச்சூரி

அய்தராபாத், செப்.20 அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அய்தராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது அய்தராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க் கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக் கிறார்கள். அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படு வதை தடுக்க வேண்டுமானால், பா.ஜன தாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment