தஞ்சையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆய்வு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

தஞ்சையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆய்வு கூட்டம்

தஞ்சை,செப்.21 தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவ மழை குறித்து முன்னெச்சரிக் கை நடவடிக்கை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசும் போது, 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை யொட்டி முன்னெச்சரிக்கை ஏற் பாடுகளை மேற்கொள்ள தமிழ் நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதவி ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங் கள் வட்டாட்சியர் அலுவலகங் கள். வட்டார வளர்ச்சி அலு வலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க வேண்டும். வருவாய் துறை யினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நிய மித்து ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதி களை கண்காணிக்க வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகை யிலும் சமாளிப்பதற்கும் நிவாரண பணிகளில் எந்தவித தோய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்ச் சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாரும் தேவையான தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலு வலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா கூடுதல் வளர்ச்சி ஆட்சியர் சிறீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், நீர் வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட் டாட்சியர்கள், வட்டாட்சி யர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment