கவிப்பேரரசு வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

கவிப்பேரரசு வாழ்த்து

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு! வணக்கம். 

'பெரியார் உலகம் ' உங்கள் வாழ்நாள் சாதனை. 

தமிழ் உலகத்திற்கு நீங்கள் கட்டமைக் கும் பகுத்தறிவுப் பெருஞ்சொத்து. 

ஒரு தலைமுறையின் தொடர்ச்சி அறுபட்டுப் போகாமல் பெரியாரை நூற்றாண்டுகள் கடந்து கடத்த இம்முயற்சி பெரிதும் துணைநிற்கும். 

பெரியாரின் பேரனாகச் செயல்படும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தப் 'பெரியார் உலகம்' என்ற பெரும்பணிக்கு அடிக்கல்லாகவும் இருப்பார்; படிக்கல்லாகவும் இருப்பார் என்று நம்புகிறேன். 

நீங்கள் பெரியார் கொள்கையின் நீட்சி. 

கருத்தும் காரியமும் இணைந்திருக்கும் உங்களை மானமுள்ள தமிழன் ஒவ்வொருவனும் வாழ்த்துவான். 

வாழ்க பெரியார்; வளர்க உங்கள் தொண்டு.

- வைரமுத்து


No comments:

Post a Comment