தருமபுரியில் சமூக நீதி நாள் சிறப்புக் கருத்தரங்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

தருமபுரியில் சமூக நீதி நாள் சிறப்புக் கருத்தரங்கு

தருமபுரி. செப்.17-- அறிவுலக பேராசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா " பெரியாரை சுவாசிப்போம் " என்கிற தலைப்பில் சேலம் பெரியார் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி, பட்டய மேற் படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, தருமபுரியில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 நிகழ்வில் பேராசிரியர் முனைவர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற் றினார். பெரியார் பல்கலைக்கழக பட்டய மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் இயக்குநர் முனைவர் பொ.மோகனசுந்தரம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

 தமிழ் மொழி வாழ்த்து உடன் தொடங்கிய, தந்தை பெரியாரின் பிறந்த நாள், " சமூக நீதி நாள்"  நிகழ்ச்சி, மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி,  கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தந்தை பெரியாரின் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் " பெரியார் பார்வை யில் மாணவர்கள் " எனும் தலைப்பில் மாவட்ட இளைஞரணி தலைவர்  த. யாழ் திலீபன் , " பெரியார் காண விரும் பிய உலகம் " எனும் தலைப்பில் மாநில அமைப்பு செயலாளர்  ஊமை, ஜெய ராமன் சொற்பொழிவாற்றினர்.  தர்ம புரி பெரியார் புத்தக நிலைய பொறுப் பாளர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத்தின் நூல்கள் கல்லூரியின் வாயிலில், இரண்டு நாட் கள் காலை முதல் மாலை வரை  புத்த கங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தந்தை பெரியாரின் புத்தகங்களை கல்லூரி பேராசிரியர்களும், குறிப்பாக அதிக அளவில் மாணவிகளும் வாங்கிச் சென்றனர். இரண்டு நாள் புத்தக விற்பனையில் ரூபாய் 2,229 க்கு புத்தகங் கள் விற்கப்பட்டன. மண்டல மாணவர் கழக செயலாளர்  இ. சமரசம் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர்  த. யாழ் திலீபன் ஆகியோர்  புத்தக விற்ப னையில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment