பெரியார் உலக மயமாகிறார் - பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பெரியார் உலக மயமாகிறார் - பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பு

சென்னை,செப்.17- சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா.மன்றத்தில் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் ஆய்வகம்-பெரியாரியப் பயிலகம் (Research and Training Centre) அடிக்கல் நாட்டு விழா பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன ஆயுள் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

விழாவில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் உலகத்தை நோக்கி

வீறுநடை போடுவோம்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையில், 

Òஇது வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றாலும், வரலாற்று சிறப்புக்கு மகுடம் சூட்டக்கூடிய நாளாக, மண்டை சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1958 இல் சொன்ன செய்தி நினைவாகும் வண்ணம், இன்றைக்கு பெரியாரின் 144ஆவது பிறந்தநாள் விழா - திருச்சி சிறுகனூரில் மிகப் பிரம்மாண்டமான  "பெரியார் உலகம்" அடிக்கல் நாட்டு விழா, இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் வருகை தந்திருக்கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், தலைமை உரை நிகழ்த்த இருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும், முன்னிலை வகிக்கும் அமைச்சர் பெருமக்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கிறோம்.

113 நினைவுச் சின்னங்கள் உலக அரங்கில் பாராட்டப்படுகிறது. பெரியார் உலகம் என்பது அந்த 113இல் ஒன்றாக அல்ல. பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமல்ல; பெரியார் உலகம், உலகம் அறிவு பரப்பக்கூடிய சின்னம். 

தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகள் கழிந்தும், அன்றாடம் பெரியார் பல்வேறு தளங்களில் மய்யப் புள்ளியாக இருக்கிறார். ஆதரவு நிலையோ, எதிர்ப்பு நிலையோ அது பெரியாரைச் சுற்றியே இருக்கிறது. பெரியாரை விட்டு வெளியில் செல்ல முடியாது. பெரியார் சிலையை கண்டாலே இன்றும் நடுங்கும் கூட்டம் இருக்கிறது. அரசியலுக்கு பெரியார் செல்ல வில்லை, ஆனால் சமூகப் புரட்சிப் படையை கட்டமைத்தார். மக்கள் சிந்தனை முன்னே சென்றால், சட்டம் நொண்டிக்கொண்டு தானே வரும் என்பதற்கேற்ப சமூக மாற்றத்தை ஏற் படுத்தினார். அறிஞர் அண்ணா, தனது அமைச் சரவையை பெரியாருக்கு காணிக்கையாக்குகி றேன் என்றார். கலைஞரிடத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இது மூன்றாம் தர அரசு என்று சொன்னபோது, இல்லை பெரியார் மொழியில் இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களே ஆளும் அரசு என்றார். அந்த வழியில் வந்த முதல்வர், Ôதிராவிட மாடல்Õ என்ற பெருமைக்குரிய முதல்வர் இன்றைக்கு திராவிடம் ஆடல் ஒளியை பாய்ச்சுகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா ஒன்றிய முழுவதும் இந்த ஒளி பாய இருக்கிறது. சில பத்திரிகைகள், பெயர் சொல்ல விரும்பாத பத்திரிகைகள் எதிர்ப்புகளை அதிகம் பேசினாலும், அவர்களுடைய எதிர்ப்புகளே இந்த ஆட்சி சரியான பாதையில் செல்கிறது என்பதற்கு சான்று. 

இந்நாளில்,  பெரியார் போட்டு தந்த பாதையில் இச்சமூகம் வீரநடை போட, பெரியார் உலகத்தை அமைத்து, அந்த உலகத்தில் வீரநடை போடுவோம் என்றார்.

திருச்சி சிறுகனூரில் அமையப்பெறுகின்ற பெரியார் உலகம் குறித்த விளக்கக் காட்சிப்பதிவு பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.

விடுதலை மலர் வெளியீடு

தந்தைபெரியார் பிறந்த நாளையொட்டி விடுதலை மலரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை யுரை ஆற்றினார்.

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றியுரையில் பெரியார் உலகம்குறித்தும், அதன் விரிவான தொலை நோக்கான செயலாக்கத் திட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். பெரியார் உலகம் பற்றிய அனைத்து குறிப்புகளையும், அமைய இருக்கும் 155 அடி சிலை, நூலகம், ஆய்வகம், அறிவியல் அரங்கம், கண்காட்சி போன்ற அனைத்து செய்திகளையும் எடுத்துரைத்து, பெரியார் உலகம் எல்லா இயற்கை பேரிடர்களையும் தாங்கி நிற்கும் என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப் பன், கணேசன், ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,   மக்களவை உறுப்பி னர்கள் தயாநிதி மாறன்,  ஆ.இராசா,  சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், துணை மேயர் மகேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எழும்பூர் இரவிச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். 

விழாவில் கழகப்பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, க.பார்வதி, மோகனா வீரமணி, ஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன், மருத்துவர் மீனாம்பாள், பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றி செல்வி, பசும்பொன்செந்தில்குமாரி, உமா செல்வராசு, சுதா அன்புராஜ், நாகவள்ளி முத்தையன்,  சு.குமாரதேவன், த.க. நடராசன், வில்வம் உள்பட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, தி.மு.க. மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அமைப் புகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.


No comments:

Post a Comment