விருதுநகரில் தி.மு.க. முப்பெரும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

விருதுநகரில் தி.மு.க. முப்பெரும் விழா

சென்னை,செப்.12- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய 'திராவிட மாடல்' நூல் விருதுநகரில் செப்.15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சர் ஸ்டாலினின் 'திராவிட மாடல்' கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்.15 அன்று விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடப்படுகிறது. தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்து முழங்கி வருகிறார்.

இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் மய்யக் கருத்தைத் தொகுத்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழகம் சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது. 144 பக்கம் கொண்ட இந்த நூல் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடுகிறார்.

முதல் பிரதியை கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு பெற்றுக் கொள்கிறார். தமிழ்நாட்டின் விடியலுக்கும், தமிழினத்தின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக அமையும் ‘திராவிட மாடல்’ கோட்பாட்டு நூலானது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிந்தனைக் கொடையாக அமையும்" என்று கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment