ஆரோக்கியமான பெருந்தமனி குறித்து மருத்துவ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

ஆரோக்கியமான பெருந்தமனி குறித்து மருத்துவ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை, செப். 19- பெருந்தமனிச் சிதைவு விழிப் புணர்வு நாளை நினைவு கூரும் வகையில்  சென்னை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சைக்கிள் பேரணி சென்னையில் நேற்று (18.9.2022) நடைபெற்றது. சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் சேகர் தேஷ்முக் பேரணியைக் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.   

இந்நிகழ்ச்சியில் சிம்ஸ் மருத்துவமனையின் இதய-பெருந்தமனி கோளாறு பிரிவின் இயக்குநர் மற்றும் மூத்த மருத்துவ ஆலோசகர் மருத்துவர் வி.வி. பாஷி பேசுகையில், நாட்டில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் பல்வேறு வகையான குருதி நாள வீக்கத்தால் பாதிக்கப் படுகின்றனர் என்று ஆய்வு கள் கூறுகின்றன. இவர்க ளில் ஏறக்குறைய 30,000 பேர் பெருந்தமனி சிதைவால் பாதிக்கப்பட்டாலும், அவர்க ளில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்கனே சரியான அறுவை சிகிச்சை உதவியைப் பெறுகின்றனர். குருதி நாளம் வீங்குதல் எந்த வயதினரையும், இரு பாலினரையும் பாதிக்கலாம். பெருந்தமனி சிதைவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, மரணம் போன்றவை ஏற்படலாம். பெருந்த மனி சிதைவு ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்தில் 3 பேரில் ஒருவர் இறப்பதற்கு சாத்தியம் உண்டு. 48 மணி நேரத்தில் இதற்கான வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடங்கு வதற்கும், பெருந்தமனியை இன்னும் கொஞ்சம் அதிகமாக நேசிப்பதற்கும் இந்த விழிப்புணர்வு உதவும்" என்றார். 

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத் துவர் ராஜூ சிவசாமி, மருத்துவமனையின் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ  உதவி யாளர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment