சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது: ஆய்வாளர் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது: ஆய்வாளர் கருத்து

சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள கோளில் கார்பன்-டை-ஆக்சை டுக்கான முதல் தெளிவான சான்றை கண்டுபிடித்துள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. 700 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும், வாயுக்களால் நிறைந்த மிக பெரிய கோள் ஒன்றிலிருந்து கிடைத்த தகவல்கள் மூலம்  கோள் உருவாக்கம் பற்றிய முக்கியமான நுணுக்கங்களை அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு முன், 4.6 பில்லியன் ஒளி யாண்டு தூரத்தில் இருந்த பால் வெளி மண்டலத்தின் கூட்டத்தையும், அதன் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டு களுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்தமுறை கார்பன் டை ஆக்சைடுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவிக்கிறது.

'நேச்சர்' ஆய்விதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கண்டு பிடிப்பு, இனிவரும் காலங்களில், சிறிய பாறைக் கோள்களின் மெல்லிய வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடைக் கண்டறிந்து அளவிட முடியும் என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.வாஸ்ப் 39 பி (WASP-39 b) என்று பெயரிடப்பட்டுள்ளது அந்த வெளிக்கோள் (சூரியக்குடும்பத் துக்கு வெளியே உள்ள கோள்). இது வியாழனின் நிறையில் ஒரு கால்பகுதி யும் (சுமார் சனியைப் போன்றது) வியா ழனை விட 1.3 மடங்கு பெரிய விட்ட மும் கொண்ட ஒரு சூடான ராட்சத வாயுக்கோளாகும்.

அதன் மிருதுவான பெரிய வடிவம் (உப்பலான) அதன் உயர் வெப்பநிலை யுடன் (சுமார் 1,600 டிகிரி பாரன்ஹீட் அல்லது 900 டிகிரி செல்சியஸ்) தொடர் புடையது. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள குளிர்ச்சியான, மிகவும் கச்சித மான வாயுக்கோள்களைப் போலல்லாமல், WASP-39b  அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றுகிறது. அதாவது சூரி யனுக்கும் புதனுக்கும் இடையிலான தூரத்தில் இது எட்டில் ஒரு பங்கு மட்டுமே.

பூமியின் நாட்கணக்குப்படி, இந்தக் கோளின் ஒரு சுற்று 4 நாட்களில் முடிவ டைகிறது. இந்த கோள், பயணிக்கும் போது அல்லது நட்சத்திரங்களின் முன் கடந்து செல்லும் போது அதன் முதன்மை நட்சத்திரம் தவிர மற்றவற் றின் ஒளி, அவ்வப்போது மங்குவதன் அடிப்படையில், 2011 ஆம் ஆண்டு இல் முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

நாசாவின் ஹப்பிள் மற்றும் ஸ்பிட் சர் ஆகிய விண்வெளி தொலைநோக் கிகள் உட்பட பிற தொலைநோக்கிக ளின் முந்தைய அவதானிப்புகள், இந் தக் கோளின் வளிமண்டலத்தில் நீராவி, சோடியம், பொட்டாசியம் ஆகியவை இருப்பதை வெளிப்படுத்தின. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு உணர்திறன் மூலமாக இப்போது இந்த கோளில் கார்பன் டை ஆக்சைடு இருப் பதையும் உறுதிப்படுத்தியுள்ளது நாசா.

ஆராய்ச்சி குழு அதன் WASP-39b  இன் அவதானிப்புகளுக்கு ஜேம்ஸ் வெப்பின் NIRSpec--அய் (Webb's Near-Infrared Spectrograph)  பயன் படுத்தியது. அப்போது, இந்தக்கோளின் வளிமண்டலத்தை அலை வரைபட மாக வரைந்தபோது, அதில் 4.1 முதல் 4.6 மைக்ரான்களுக்கு இடையில் (மலை இருக்கும் பகுதி) கார்பன் டை ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தது. சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கோளில் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான, விரி வான ஆதாரம் கிடைப்பது இதுதான் முதல்முறை.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக மாணவரும், இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவான, "பயணிக்கும் வெளிக்கோள்களின் முதிர்ச்சியடை யாத வெளிப்பாட்டு அறிவியல்"(JWST Transiting Exoplanet Community Early Release Science)  குழுவின் உறுப்பினருமான ஜாபர் ருஸ்தம்குலோவ், "என் திரையில் அந்த தரவைப் பார்த்தவுடன், அந்த மிகப்பெரிய, கார்பன் டை ஆக்சைடு அம்சம் என்னை இழுத்தது. இது ஒரு சிறப்பு தருணம். அதாவது வெளிக் கோள் அறிவியலில் ஒரு முக்கியமான நிலை அது" என்கிறார். இவ்வளவு நுட் பமான வேறுபாடுகளை இதற்கு முன் எந்த ஆய்வகமும் அளவிடவில்லை.

இப்படி, கார்பன் டை ஆக்சைடின் தெளிவான சமிக்ஞையைக் கண்டறி வது சிறிய மற்றும் நிலப்பரப்பு-அளவி லான கோள்களின் வளிமண்டலங்க ளைக் கண்டறிவதற்கு உதவும் என்று குழுவை வழிநடத்தும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நடாலி படால்ஹா கூறினார்.

ஒரு கோளின் வளிமண்டலத்தில் உள்ள கலவையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் அது கோளின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகள் அந்தக் கோள் உருவாக் கத்தின் கதையின் உணர்திறன் ட்ரேசர் கள்" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் மற்றொரு உறுப்பினரான அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் மைக் லைன் கூறினார்.

No comments:

Post a Comment