பிள்ளையார் - பெரியார் - சங்பரிவார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பிள்ளையார் - பெரியார் - சங்பரிவார்

வழக்குரைஞர் 

பூவை.புலிகேசி

பல்லாண்டுகளாக பக்தர்கள் “பிள்ளை யார் சதுர்த்தி” என்று ஒரு பண்டிகையை அவரவர்களின் வீடுகளில் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர். அண்மைக் காலங்களில் இப்பண்டிகையை இந்துத்துவா வாதிகள் வெறுப்பு அரசிய லுக்கு வாய்ப்பாக்கி, சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டி, கலவரக் காடாக்கி, மீண்டும் பார்ப்பன மேலாண் மையை நிறுவ இதனையே வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இது குறித்து விவாதங்களில்  பங்கேற்கும் இந்துத்துவா வாதிகளான சங் பரிவாரங்கள் எதற்கெடுத்தாலும்  இந்துக்க ளின் கடவுளான பிள்ளையாரை உடைத்த வர் பெரியார் என்று திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர்.  ஆம், உண்மைதான்.  தமிழரின் உயர்வுக்கு உழைத்த தந்தை பெரியார் “ பிள்ளையார் பொம்மையை உடைத்தார் ”  என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதன் தன்மை என்ன? என்பது தான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.  

28.4.1953 அன்று வடக்குமாங்குடி  என் னும் ஊரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் “ நம்மை சூத்திரனாக - தாழ்ந்த ஜாதி மகனாகப் பிறப்பித்து, இன்னொருவரை மேல் ஜாதிக்காரனாக பிராமணனாக பிறப்பித்து, ஒருவன் சதா காலமும் உழைத்துப்போட்டு ஒன்றும் இல்லாமல் வாடவும் தற்குறியாய் இருக்க வும், இன்னொருவன் பாடுபடாமல், உழைக் காமல் மேல்ஜாதிக்காரனாக இருக்கவுமான அமைப்புக்குக் காரணமாக இருக்கிற இன் றைய கடவுள்கள் என்பவைகளை ஒழிக்க வேண்டும் உடைத்துத் தள்ளவேண்டும்.”

உடைப்பதற்கு முதல் கடவுளாக எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழிப்போட்டு ஆரம்பிப்பார் களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெ டுக்கிறேன்.  தோழர்களே!  தயாராய் இருங் கள்” என்று தந்தை பெரியார் அறிவித்தார்.

அதே அறிவிப்பில் தந்தை பெரியார் “விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவு டன், கோவிலிலே இருக்கிற விக்ரகங்களை (குழவிக் கற்களை) கோவிலுக்குள்ளே போய் புகுந்து உடைப்போம் என்று யாரும் கருதவேண்டாம்.  இந்தப்படி கோவிலுக் குள்ளே புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. கோவிலுக்குள் ஒருவருமே போக மாட் டோம்.  குயவரிடத்திலே மண் கொடுத்து இன்றைய கோவிலில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச் சொல்லி, அல்லது கடை களிலே விற்கிறதே வர்ணம் அடித்த பொம் மைகள் அதை வாங்கிக் கொண்டு வந்து ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, நடு ரோட்டில் போட்டு உடைப் போமே தவிர, கோயிலில் புகுந்து விக்ரகத் தைப் பெயர்த்துக் கொண்டு வரும் வேலை யையோ அல்லது அவைகளுக்கு சேதம் ஏற்படுகிற மாதிரியோ யாரும் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித் துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

மேலும் தந்தைபெரியார்,

27.5.1953 ஆம் தேதி புதன்கிழமை புத்தர் ஜெயந்தி நாளில் போட்டு உடைக்க ஆனைமுக “தெய்வ” உருவ பொம்மை வேண்டுமா? வேண்டுமானால் கோயிலுக் குப் போகாதீர்கள்; அரசமரம், வேப்பமரம் அடியில் மற்றும் கல்லுக்கட்டு மேடையின் அருகே போகாதீர்கள்?

இது கண்டிப்பான வேண்டுகோள், உத் தரவாகும்.  மற்றெங்கே செல்லுவதென்றால், மண்ணுடையான் (குயவன்) வீட்டிற்குச் சென்று ஆர்டர் கொடுத்து செய்யச் சொல் லுங்கள். அது முடியவில்லையானால், புதுச் சேரி பொம்மைகள் இருக்குமிடத்திற்குச் சென்று விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

கலகம், குழப்பம், வாய்ச்சண்டை, வாக்குவாதம் வைத்துக்கொள்ளாதீர்கள் பொதுக்கூட்டத்திற்கு  அனுமதி கேட்கும் போதே திராவிடர் கழகம் சார்பாக புத்த ஜெயந்தி கொண்டாட என்று அனுமதி கேளுங்கள்.

இரகசியம் எதுவும் வேண்டாம்.  எல்லாக் கட்சியினருடனும் நேசபாசமாய் இருந்து கொண்டாடுங்கள்”.  என்று அறி வுறுத்தி அதன்படி நடந்தும் காட்டியுள்ளார்.

என்னே பெரியாரின் வாய்மை, நேர்மை, நிதானம், பொது ஒழுங்கு பேணு வதில் இருந்த சமுதாய அக்கறை!

அதே நேரத்தில் அண்மைக்காலங்களில் பிள்ளையார் சதுர்த்தி என்கிற பெயரில் சங் பரிவாரங்கள் நடந்து கொள்ளும் தன்மை களையும் பாருங்கள்.

சமய ஊர்வலங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல.  அத்தகைய சமய ஊர் வலப் பாதை எளிதில் மாறுதலுக்கு உட் படாதவாறு திட்டமிட்டு நடக்கும். அத் தகைய ஊர்வலங்களில் “வேல் வேல்” - ‘அரோகரா’ - ‘ கோவிந்தா’ என்பன போன்ற பக்தி சார்ந்த முழக்கங்களை பக்தர்கள் முழக்கமிடுவர்.

ஆனால், பிள்ளையார் விசர்ஜன ஊர்வலம் என்று இந்துத்துவ அமைப்பின ரால் நடத்தப்படும் - நடத்தப்பட்ட - ஊர் வலங்கள் சிறுபான்மையினரின் வாழ்விடங் களை மய்யப்படுத்தியும்  இசுலாமியர் வழி பாட்டு இடமான பள்ளிவாசல் வழியாகவும் திட்டமிட்டும், திடீரென்றும் மாற்றி நடத்திச் செல்வதையும், அத்தகைய ஊர்வலங்களில் பக்தி முழக்கம் எழுப்பப்படுவதைத் தவிர்த்து 

“பத்துப்பைசா முறுக்கு;  பள்ளிவாசலை நொறுக்கு! 

“நாலும் நாலும் எட்டு;  துலுக்கனைக் கண்டால் வெட்டு”

“பனைமரத்துல வவ்வாலா; இந்துக்க ளுக்கு சவாலா” என்பன போன்ற பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தி, வன் முறையைத் தூண்டும் வகையில் முழக்க மிட்டு வருகின்றனர்.  இத்தகைய வன்முறை யைத் தூண்டும் சங்பரிவாரங்கள்தான். ‘அற வழியையே’ அணிகலனாகக் கொண்டு போராடிய தந்தை பெரியாரை வன்முறை யாளர் என்பதுபோல பக்தர் மத்தியில் தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.  ஆனால், உண்மை அதுவல்ல என்பதை உச்சநீதிமன்றமே உறுதிப்படுத்தியது.

ஆம், பெரியார் பிள்ளையாரை உடைத் தது குறித்து வீரபத்திரன் (செட்டியார்) என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.  அது மேல் முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் சின்ஹா, புவனேஸ்வர் அமர்வில் 25.8.1958 அன்று பெரியார் குற்றவாளி அல்ல என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆம், பெரியார் ஒருபோதும் வன் முறையை விரும்பாதவர்.  கடவுளின் பெயரால் கலவரம் செய்யாத மனிதநேயப் பற்றாளர்.  அவர் பிறந்த மண்ணில் கடவு ளின் பேரால், மதத்தின் பேரால் கலவரம் ஏற்படுத்தத் துடிக்கும் காவிகளுக்கு இட மில்லை என்கிற நிலையை உருவாக்கு வோம்! 

No comments:

Post a Comment