கருநாடகா மேனாள் பிஜேபி முதலமைச்சர் மீது ஊழல் புகார் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

கருநாடகா மேனாள் பிஜேபி முதலமைச்சர் மீது ஊழல் புகார் வழக்கு

பெங்களூரு, செப். 8- பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டி.ஜே.ஆப்ரஹாம் கடந்த 2020 ஆம் ஆண்டு கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதி மன்ற‌த்தில் அளித்த புகார் மனுவில், ''கடந்த 2008‍-2010 காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்த எடியூ ரப்பா அரசு ஒப்பந்தங்களை வழங் குவதிலும், பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் வீட்டு மனை வழங்கியதிலும் லஞ்சம் பெற்று உள்ளார். இதில் அவரது மகன் விஜயேந்திரா,மருமகன் சஞ்சய், பேரன் சசிதர் மரடி உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கிறது. இந்த புகார் மீது விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து எடியூரப்பா தாக்கல் செய்த மனுவில், ''குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு நீதிமன்றம் என் மீதான வழக்கை விசாரிக்க முடியாது'' என குறிப்பிட்டார். இதை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021 ஜூலை 8ஆம் தேதி, எடியூரப்பா மீதான புகார் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்துஆப்ரஹாம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் தத் யாதவ், ‘‘ எடியூரப்பா மீதான தனி யாரின் புகாரை விசாரிக்க முடி யாது என கூற முடியாது. எனவே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எடியூ ரப்பா உள்ளிட்டோருக்கு எதி ரான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால், விசாரணை நடத்த லாம். இந்த‌ ஊழல் புகார் குறித்து சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்''என்று உத்தர விட்டார்.

No comments:

Post a Comment