தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி, செப். 14-  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ர வன் குமார் குறிப்பிட்டு உள்ளார்.  அதன் விவரம் வருமாறு,

2021-2022-ஆம் ஆண் டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற் காக பாடுபட்ட தலை வர்களான காந்தியார், ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறி ஞர் கலைஞர் ஆகியோ ரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய் யப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான 15.9.2022 மற்றும் 17.9.2022 ஆகிய நாள்களில், முற்பகல் 10.00 மணிக்கு கள்ளக் குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள் ளியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடை பெறவுள்ளது. 

மேலும், அறிஞர் அண்ணா பிறந்தநாளுக் கான பேச்சுப்பேட்டியில் பள்ளி மாணவர்களுக்கு தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாண வர்க்கு அண்ணா, அண் ணாவின் மேடைத்தமிழ், அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி! மக்களிடம் செல்! என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. 

தந்தை பெரியார் பிறந்த நாளுக்கான பேச் சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி தலைப்பாக "தொண்டு செய்து பழுத்த பழம்", "தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்", "தந்தை பெரியாரின் பகுத் தறிவுச் சிந்தனைகள்", "தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதா யம்", "தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்" எனும் தலைப்புகளும், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம் பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமு தாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்க ளும் பெரியாரும் என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. 

மேலும், பள்ளி கல் லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, இரண் டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான் றிதழ் வழங்கப்படவுள் ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2,000 வீதமும் மொத் தம்      ரூ.24,000-த்திற்கு பரிசு கள் வழங்கப்படவுள்ளது. 

பேச்சுப்போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தினை 9786966833 என்ற தொலைப்பேசி எண் அல்லது tamildevelopmentvpm@gmail.com  என்ற மின்னஞ்சலிலும் அல்லது உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சித் தலை வர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியினைத் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயி லும் மாணவ - மாணவியர் கள் இப் பேச்சுப்போட்டி களில் பங்குபெற்று வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment