முகக்கவசம், HHÞ கிட் தயாரிக்க புது கட்டுப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

முகக்கவசம், HHÞ கிட் தயாரிக்க புது கட்டுப்பாடு

அய்தராபாத், ஆக.3 ஒன்றிய மருத்துவக் கட்டுப்பாடு வாரிய அனுமதி இன்றி முகக் கவசம்,  பிபிஇ கிட் போன்றவை தயாரிக் கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்களுக் கான விதிமுறைகள் - _ மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் வரைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இது கடந்த 2018-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில் காணப்படுவதாவது:

”வரும் 11.08.2022 முதல் பொதுவாகப் பயன் படுத்தப்படும் பெரும்பாலான மருத்துவ  உபகர ணங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  . இந்த உபகரணங்கள்  முகக் கவசம், இலக்க வெப்பமானி (Digital Thermo Meter), அறுவை சிகிச்சை கையுறைகள், பி பி இ கிட், மருத்துவமனை படுக்கை, நோயாளி அணியும் ஆடை, தொடுவில்லை (Contact lens), கிருமி நாசினி, அக்குபஞ்சர் கிட், நோயாளி எடை அளவு கருவி, குழந்தைப் படுக்கைகள் , நெற் றியின் வெப்பநிலையை கண்டறி யும் பட்டை, ஸ்டெரிலைசர், ஸ்ட் ரெச்சர், போர்செப்ஸ், வலியை குறைக்க பயன்படும் ஐஸ்பேக், ட்ரெட்மில், எலக்ட்ரானிக் மசா ஜர், செயற்கை விரல் ஆகியவை ஆகும். இந்த உபகரணங்களை உற் பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மருந்து -_ தரக் கட்டுப் பாட்டு ஆணைய இணையதளம் (www.cdscomdonline.gov.in) மூலம் உற்பத்தி உரிமத்தை பெற விண் ணப்பிக்க வேண்டும்.  ஆகவே, 11.08.2022 முதல் உரிய உரிமம் இல்லாமல் இந்த மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பது குற்றமாகும். மேலும், 11.08.2022 முதல் உரிய உரிமம் இல்லாத மருத்துவ உபகரணங்களை விற் பனை செய்வதும் குற்றம் ஆகும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment