இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கு - தள்ளுபடி செய்ய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கு - தள்ளுபடி செய்ய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடில்லி,ஆக.20- இலவச திட்டங்களுக்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலவசத் திட்டங்களுக்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், தி.மு.க.வையும் எதிர்மனுதாரர்களாக இணைக்கக்கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு 17.8.2022 அன்று மீண்டும் விசார ணைக்கு வந்த போது, வழக்கில் தி.மு.க.வை எதிர்மனுதாரராக இணைத்துக்கொள்ள நீதி பதிகள் அனுமதி அளித்தனர்.

மேலும், அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்க முடியாது என்றும், எது சரியான வாக்குறுதிகள் என்பது மட்டும்தான் கேள்வி என்றும் கூறினர்.

இந்நிலையில், இலவச திட்டங்களுக்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் உச்சநீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களுக்கு தடை போடவேண்டும் என்ற குறுகிய நோக்கில் இலவச திட்டங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உச்சநீதி மன்றம் குழு அமைக்க உத்தரவிடுமானால், மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை திறம்பட செயல்படுத்து வதற்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வழிகளை அந்தக் குழு பரிந்துரைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 22.8.2022 அன்று விசாரணைக்கு வரும்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment