தலைநிமிர்ந்த பெண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

தலைநிமிர்ந்த பெண்!

பாகிஸ்தானைச் சேர்ந்த 13 வயது அப்ஷீன் குல் என்ற பெண்ணுக்கு உடலில் மோசமான பிரச்சினை. அவரது கழுத்து ஒரு பக்கம் சாய்ந்து செங்கோணமாக இருக்கும். 10 மாதக் குழந்தையாக இருந்தபோது அக்கா வின் கையிலிருந்து தவறி விழுந்ததில், அவரது கழுத்து வளைந்துவிட்டது. அப்ஷீ னின் வாழ்க்கை தலைகீழானது.

அவரைப் பார்வையிட்ட மருத் துவர் சில மருந்துகளையும் கழுத்துக்கு கழுத்துப் பட்டை ஒன்றையும் தந்தார். இருப்பினும், அது வலியை மோச மடையச் செய்தது. கூடுதல் மருந்து களை வாங்கவும் வசதி இல்லை. அப் ஷீனுக்கு ஏற் கெனவே Cerebral Palsy எனும் பெருமூளை வாதம் இருந்தது. அவர் 6 வயதில்தான் நடக்கத் தொடங்கினார்... 8 வயதில் தான் பேச ஆரம்பித்தார்.

அவர் பள்ளிக்குச் செல்லவில்லை, நண்பர்களும் இல்லை. அப்ஷீன் 12 வயதுவரை வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது - வலியைத் தாங்கிய வாறு. 2017-ஆம் ஆண்டு முதல் அவரது கதை உலகளவில் பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் டில்லி யைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன், அப்ஷீனுக்கு உதவ முன்வந்தார்.

தண்டுவடம் திரும்பிக்கொண்ட தால் உண்டான கழுத்துக் குறைபாட் டைச் சரிசெய்வதற்கு அப்ஷீனுக்குச் சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் தேவைப் பட்டன. அறுவைச் சிகிச்சை யின்போது, அவரது இதயமோ நுரை யீரலோ செயலிழக்கும் அபாயம் இருந்ததாக மருத்துவர் குறிப்பிட்டதாக அஃப்ஷீனின் குடும்பத்தார் கூறினர். இவ்வாண்டு பிப்ரவரியில், அப்ஷீனின் கழுத்துக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 6 மணி நேர அறுவைச் சிகிச்சையில் அவரது மண்டை ஓடு தண்டுவடத் துடன் இணைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது.

அப்ஷீன் தற்போது சொந்தமாக நடக்கிறார்... பேசுகிறார்...சாப்பிடுகிறார்... நேரான கழுத்துடன். சிகிச்சை செய் திருக்காவிட்டால் அப்ஷீன் வெகுநாள் உயிருடன் இருந்திருக்கமுடியாது என்று மருத்துவர் கிருஷ்ணன் செய்தி யாளரிடம் சொன்னார். அப்ஷீனின் முகத்தில் ஏற்பட்டுள்ள புன்னகை யைக் கண்டு ஆனந்தமடைவதாகக் கூறுகின்றனர் அவரின் பெற்றோர்.

No comments:

Post a Comment