செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

செய்தியும், சிந்தனையும்....!

கோவில்கள் தோன்றியது எப்படி?

  • எம்.ஜி.ஆர். கோவில் கும்பா பிஷேகம் ஆகஸ்டு 21 இல்.

>> கோவில்கள் தோன்றியது எப்படி என்ற கதை புரிகிறதா?

காக்கி காவியானது

  • ஆன்மிகப் பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்..

- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்

>> ஓ, காக்கி உடையைத் தூக்கி எறிந்துவிட்டு, காவியைத் தேர்ந் தெடுத்ததை சொல்கிறாரோ!

முரண்பாட்டின் குத்தகை

  • இலவச வேட்டி, சேலை டெண்டர் தாமதமானால் பி.ஜே.பி. போராடும்.

- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்

>> இலவசங்களைக் கொடுப்ப தால் தமிழ்நாட்டில் பொருளா தாரச் சீரழிவு என்றவர்கள் யார்?

பொழுது விடிந்தால்!

  • ஆளுநர் ரவியுடன் ரஜினி சந்திப்பு - அரசியல் உரையாடல்! 

>> அரசியல், ஆன்மிகம் என் பது பாம்பும் - கீரியும் மாதிரி - தனது பிறந்த நாளில் தூர்தர்ஷ னில் ரஜினி  பேட்டி (1995, டிசம்பர் 12, 13).

பக்தி வந்தால் புத்தி போகும்!

  • காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ் வரர் கோவிலில் ஓபிஎஸ் ஆதர வாளர்கள் சிறப்பு வழிபாடு. 

>> வழக்குக்கு வழிபாடு, இரட் டைத் தலைமைக்கு வழிபாடு - ஒவ்வொரு டிபார்மெண்டுக்கும் ஒரு கடவுளோ!

பெரிய ஜம்ப்!

  • சுயேச்சை கட்சியைச் சேர்ந்த ஒருவர் இணைந் ததால் சென்னை மாநகராட்சியில் பி.ஜே.பி. பலம்

>> அடேயப்பா எவ்வளவுப் பெரிய பெரும்பான்மை!

எதிரி யார்?

  • எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்து அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள். - இ.பி.எஸ். குமுறல்

>> எதிரி என்றால் யார்? பி.ஜே.பி.யா?

புத்தரைத்தான் விஷ்ணு அவதாரமாக்கி விட்டனரே!?

  • நேர்மையாக அகழாய்வு நடத்தினால் புத்தர் சிலைகள் கிடைக்கும். 

>> புத்தர் சிலைகள், கோவில்கள் திட்டமிட்டு இந்துக் கடவுள்களா கவும், கோவில்களாகவும் மாற்றப்பட்டு விட்டனவே!


No comments:

Post a Comment