லிங்காயத் தலைவர்களுடன் சந்திப்பு - பிஜேபியை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபடுகிறது : ராகுல் காந்தி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

லிங்காயத் தலைவர்களுடன் சந்திப்பு - பிஜேபியை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபடுகிறது : ராகுல் காந்தி தகவல்

பெங்களூரு,ஆக.4 கருநாடகத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் குழுவின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தாவணகெரேவில் புதன்கிழமை (3.8.2022) நடைபெற்ற, மேனாள் முதல மைச்சரும் எதிர்க் கட்சித் தலைவருமான சித்தராமையாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி பேசியதாவது:

சித்தராமையாவின் சிந்தனைகள், கொள்கைகள், மக்கள் நலன்சார்ந்த செயல்பாடுகள் மீது பற்று க்கொண்டிருப்ப தால் இந்த விழாவில் கலந்துகொண்டிருக் கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை சித்தராமையா முன்னெடுத்துச் சென் றதைப் பாராட்டுகிறேன். அவரது ஆட்சி யில் கருநாடக மக்களுக்கு புதிய வளர்ச்சிப் பாதையைக் காட்டினார். கருநாடகத்தின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு சிந்தனை யோடு சமூகநீதி அடிப்படையில் எல்லோ ருக்குமான ஆட்சியை நடத்தினார்.

ஆனால், இன்றைய பாஜக ஆட்சி முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நல்லிணக்கம் காணப்பட்டது. இன்றைய பாஜக வெறுப்பை விதைத்து, மக்களைப் பிளவு படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பசவண்ண ரின் தத்துவங்களுக்கு நேரெதிரான ஆட் சியை பாஜக நடத்தி வருகிறது.

கருநாடகத்தின் மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்தில் காங்கிரசுக்கு நம்பிக்கை யுள்ளது. அதுதான் இந்தியாவின் அடிப் படையாகும். அனைத்து மொழிகள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள்தான் இந்தியாவைக் கட்டமைத்துள்ளது. ஆனால், பாஜக ஆட்சி ஒரே தத்துவத்தை மக்கள் மீது திணிக்க முற்படுகிறது.

கருநாடகத்தை மேம்படுத்த, ஒடுக் கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு உழைக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் அரசின் அன்னபாக்கியா, ஷீரபாக்கியா, கிருசிபாக்கியா, வித்யாசிறீ, இந்திரா உணவகம் போன்ற திட்டங்களை மக்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். தேசிய, மாநில அளவில் மக்கள் நலனுக்காக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய திட்டங் களை வரிசையாகப் பட்டியலிடலாம்.

காங்கிரஸ் ஆட்சியின்போது கருநாட கத்தை பன்னாட்டளவில் உயர்த்தினோம். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்திய கணினி மயமாக்கும் திட்டத்தை பாஜக எதிர்த்தது. ஆனால், பன்னாட்டளவில்  கருநாடகம் இன்று கவனிக்கத்தக்க மாநிலமாக உள்ளது.

கருநாடகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறை வெறியாட் டம் தலைதூக்கியுள்ளது. நல்லிணக்கமும் அமைதியும் நிலைத்திருந்தால் தான் தொழில், வணிகம் வளர்ச்சி அடையும்.

பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளத்தை ஏழைகளின் கரங்களில் கொடுத்திருக்கிறோம். ஆனால், பாஜக ஆட்சியில் மக்கள் பணம் பறிக்கப்பட்டு ஒருசில பணக்காரர்களின் கைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் ஏழை மக்களிடம் நாட்டின் வளத்தை கொண்டு சேர்த்தது.

சித்தராமையாவும் டி.கே.சிவக்குமாரும் மேடையில் கட்டித் தழுவிக் கொண்டதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஒன்று பட்டுள்ளது. கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது தூய்மையான, ஊழலற்ற, அனைத்து மக்களின் நிர்வா கத்தை அளிப்போம். பெங்களூரை உல கின் தலைசிறந்த நகரமாக மாற்றுவோம். ஏழைகளின் மேம்பாட்டுக்கு உழைக்கும், வெறுப்பைப் பரப்பாத காங்கிரஸ் ஆட்சி கருநாடகத்தில் அமையும் என்றார்.

இந்த விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லிங்காயத் பீடாதிபதிகளுடன் சந்திப்பு

கருநாடகத்தில் லிங்காயத் சமுதாய பீடாதிபதிகளுடன் ராகுல் காந்தி சந்தித்து நீண்டநேரம் உரையாடினார். அடுத்த ஆண்டு கருநாடக சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், கருநாடகத் தில் பெரும்பான்மையாக வாழும் லிங் காயத்து சமுதாய மக்களை ஈர்க்கும் நோக் கத்தில் ராகுல்காந்தி பீடாதிபதிகளை சந் திக்க   விரும்பியதாகக் கூறப்படுகிறது. 


No comments:

Post a Comment