ஆராய்ச்சி கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

ஆராய்ச்சி கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஆக.5 உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த நிறுவனங் களுடன் தொடர்பு கொள்வதற்கும், உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் கல்வித்துறையில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்கும், ஒரு சிறந்த வாய்ப்பை பெறுவதற்கும் சிமெட்ஸ் கல்வி நிறுவனம் சென்னை ராயல் காமன்வெல்த் சொசைட்டி ஆசிய பிராந்தியம் மற்றும் அடாசியஸ் ட்ரீம் குரூப்ஸ்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொழுத்திட்டது.

மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம், ஆராய்ச்சி முயற்சிகள் போன்றவற்றை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும், இது செல்வாக்குமிக்க உலகளாவிய கொள்கைகளுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இளைஞர்களின் பங்கேற்பை முதன்மைப்படுத்தும் என சிமெட்ஸ் பல்கலைக் கழகத் தின் வேந்தர் என்எம். வீரையன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment